நீ வேண்டும்.. குறையாத‌ நேசம் - கா.ரமேஷ், பரமக்குடி

நீ வேண்டும்.. குறையாத‌ நேசம் - Tamil Poem (தமிழ் கவிதை) by கா.ரமேஷ், பரமக்குடி

Photo by Jayden Collier on Unsplash

01.!
நீ வேண்டும்...!!
---------------------!
இரவு நேரத்து பவுர்ணமி போல்!
இதய தேசத்தில் நுழைந்தவளே...!
ஒற்றை அன்றில் பறவை என்னை!
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...!
வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் என‌க்கு!
வெளிச்ச புள்ளியாய் வ‌ந்த‌வ‌ளே.!
குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்!
கூடி நீ என்னோடு தவள வேண்டும்!
உன் வாய் ஒழுகும் சிறு உண‌வெடுத்து!
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...!
இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்!
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.!
என் வாழ்க்கை முடியும் வரை!
என்னில் பாதியாய் இல்லை!
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!!
02.!
குறையாத‌ நேசம்....!
----------------------!
கையளவு உணவைகூட‌!
கைகள் ஒன்றுகூடி!
களிப்போடு உண்டு முடித்து!
பசியை!
அன்பால் நிரப்பிக் கொள்ளும்!
அற்புதம் நிறைந்ததுதான் நட்பு...!
சில்லரைகள் பெருகிபோனதால்!
சேர்த்து வைத்த‌ நேசங்கள்!
சிதறுகின்ற போதும்!
கல்லரை சேரும்வரை கூட‌!
கைகோர்த்து வரும்!
கள்ளமில்லா நேசம்தான் நட்பு.... !
இன்பத்தை இரட்டிப்பாக்குவதும்!
இதயத்தை தித்திப்பாக்குவதும்!
துன்பத்தை துடைத்து போடுவதும்!
துயரங்களை சருகாக்குவதும்தான்!
தூய்மை கொண்ட நட்பு...!
தேவைகள் நிறைந்த‌!
வியாபார உலகத்தில் புதியதாய் பல‌!
பொய்கள் சொன்னாலும் - நட்பெனும்போது!
உண்மையை மட்டுமே!
உரக்கச் சொல்வது நட்பு...!
காலங்களின் சூழ்ச்சியில்!
கண்பார்க்க முடியாவிட்டாலும்!
உறவுகளின் நேச‌ சுழ‌ற்ச்சியில்!
உற‌வாட‌ முடியாம‌ல் போனாலும்!
இதய க‌ருவ‌ரையில்‍ எப்போதுமே!
இருக்கும் குழ‌ந்தைதான் ந‌ட்பு...!
நேற்று இன்று நாளை என‌!
நெடுந்தூரம் சென்றாலும்!
காற்று வாங்கி களைத்திருக்கும்!
கருமைமிகு வானம் க‌ளைந்தாலும்!
சேர்த்து வைத்த‌ உற‌வுக‌ள்!
சித‌றியே போனாலும் நமக்கு!
குறையென்று தெரிந்தால்!
கூடவே வரும் கோடி ந‌ட்புக‌ள்தான்!
என்றுமே நமக்கு குறையாத நேசம்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.