கண் விழித்து பார்க்கையில்....
கத கதப்பாய் இருந்தது என் உலகம்...
காற்றும் நீரும் நிறைந்த...
கருப்பையில் ஓர் உருவாய் நான்...
என் வயிற்று பசி போக்க..
தொப்புள் கொடி வழியே உணவு தந்தாய்....
அன்று நான் அறியேன்.....
வாழ் நாள் முழுதும் நீ எனை பட்டினி போடுவாய் என....
எனக்கு சுவாசம் தந்த
உன் பாசம்....
வெறும் வேஷம் என்றறியேன்...
அம்மா....
உன்னிலிருந்து எனை பிரித்து விட்டாரென்று எண்ணி....
அழுகின்றேன்....
ஆயுசு முழுக்க நீ எனை விட்டு பிரிந்திருப்பாய்....
என்றறியாமல்.....
உன்னிலிருந்து பிறந்த என்னை....
பஞ்சு மெத்தையில்.....
படுக்க வைப்பாய் என்றெண்ணினேன்....
பாழும் கிணற்றிலோ...
பிளாட்பாரத்திலோ.......
குப்பை தொட்டியிலோ....
எனை வீசிவிட்டு செல்வாய்....
என அறியாமல்.....
பிறந்த நாள் அறியாமல்...
பெற்றோர் பெயர் தெரியாமல்...
யாரோ வைத்த பெயர் சூடி....
வளர்கின்றேன்......
என் எதிர்காலம் புரியாமல்....
அம்மாவின் முகமறியேன்....
எனை அரவணைத்த......
முகங்கள் என் அன்னையாய்.....
என் வளர்ச்சிக்கு......
பங்களித்தோர்....
என் தந்தையாய்.....
எனைப்போல்...இன்னும் பலர்.....
என் சகோதரர்களாய்....
வாழ்கின்றோம் ஓர் கூட்டில்....
அனாதை இல்லம் எனும் வீட்டில்....
பிறந்த குலத்தின்
பெயர் அறியோம்...ஆதலால் ..
அனாதை என்னும் அடைமொழி சூட்டி விட்டார்.....
அம்மா அன்று உன்....
கருவினுள் நான் பூவாய்.....
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
முள்ளாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
உனக்கு சுகமாய்....நான்
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
சுமையாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
விருப்பின்றி....
எனை விதைத்தாய்.....
அம்மா....உன் பெயர்......
என் மனதில் முள்ளாய்....!
காயத்ரி பாலாஜி