எனது
நித்திரை இழந்த இரவின்
நடு நிசிவேளை
என் அறைக்கதவு திறந்து
முற்றத்திற்கு வருமென்
மேனி மீதில்
மென்மையும் வேகமுமாய்
மோதிப் பிரியும் ஈரக்காற்றாக
நீ இருந்துவிடலாகாதோ
என்ற தீரா ஏக்கத்தில்
அதே இடம்விட்டு நகராமல்
நெடு நேரம் நின்றுவிடுகிற
என்னை
நீ காணாமாட்டாய்
உன் கனவில்கூட
நான்
காணாமல் ஆக்கப்பட்டிருப்பேன்.
என்றாலும்
நீ என்னை மறந்துவிட்டாய்
என்பதையே
நீ என்னை நினைத்திருந்தாய்
என்பதற்கான சாட்சியமாய்
வைத்துகொள்வேன்
மீனாள்செல்வன்