இன்றைய யுவதிகள்...
நவீன உலகின்...எந்திரன்கள்...
அடுக்களை முதல்...
அறிவியல் வரை...
அனைத்தும் அறிந்தவர்கள்...
ஆணுக்கு நிகராய்...
அங்கம் வகிப்பவர்கள்...
சிறகுகள் முளைத்ததும்...
சிந்திக்க தொடங்கியவர்கள்...
சாதித்து காட்டினார்கள்...
சரித்திரம் படைத்தார்கள்...
பாரதி சொன்ன பாங்கு...
பண்புடன் வாழ்பவர்கள்...
அன்னையாய்
துணைவியாய்...
தோழியாய்...
அவதாரம் எடுக்கின்றார்... அழகிய தேவதைகளாய்...
அரிதாரம் பூசுகின்றார்
உங்களில் ஒருத்தியாய்...உங்களுடன் வாழ்கின்றார்.....
உணருங்கள்..
யுவனுக்கும், யுவதிக்கும்...
இனம் வேறு .. ஆனால்...
மனம் ஒன்று...!
காயத்ரி பாலாஜி