பெரியாறு
ஓரிடத்தில் ஊற்றெடுத்து...
ஓரிடத்தில் கலக்கிறாய்..
அங்கு ஓர் அணை போட்டார்..
அனைவரின் தாகம் தீர்க்க..
அரசியல் தந்திரத்தால்..
அப்பாவி மக்கள் சிக்க...
ஆளுக்கொரு பக்கமாய் ....
ஆர்ப்பரித்து நிற்கின்றோம்...
அண்டி வந்தோரை ...
அடித்து விரட்டுகின்றோம்...
அணை.. காக்க..
அன்பிழந்தோம்..அறிவிழந்தோம்...
வேற்றுமையில் ஒற்றுமையில்லை..
சக மனிதரிடையே சகோதரத்துவமில்லை...
ஆபத்து வருவதை...
அறியாத அணை...
ஆற்று நீரை....
கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது..
அனைவரும் பங்கிட்டுக்கொள்ள
காயத்ரி பாலாஜி