சிரித்த முகம் இவளுக்கு!
சிவந்த நிறம் இதழுக்கு!
மதம் இல்லை அவளுக்கு!
மணம் உண்டு கூந்தலுக்கு!
சிரித்திடும் ஒலியினில்!
சில்லறைகள் சிதறியோடும்!
சிலிர்த்திடும் பேச்சினில்!
செவிட்டுக் காதிலும் தேன்பாயும்!
அண்டம் முழுதும் ரசிகர்களை!
ஆட்டிப் படைக்கும்!
அளப்பரிய ஆற்றலை!
அக்குகளுக்குள் மறைத்தவள்!
ஆசியாவில் பிறந்தவளுக்கு!
ஆப்பிரிக்காவிலும் ரசிகர் மன்றம்!
ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை!
அவள் பெயரில் இணையதளம்!
அவள் பெயரில் விழா எடுத்தால்!
ஆட்கள் பல்லாயிரத்தை!
அரங்கத்தில் குவிக்கும்!
அதீத சக்தி பெற்றவள்!
நான் நீ என்று!
நங்கையர்கள் போட்டி போட்டு!
நடனமாடத் தூண்டும்!
நற்பெயரைப் பெற்றவள்!
அரைப் பாவாடை கட்டினாலும்!
அரைச் சீலை உடுத்தினாலும்!
திரைச் சீலை விலகும்போது!
திசைகள் எட்டும் எதிரொலிக்கும்!
அவள் பிறந்த நாளன்று!
ஆலயங்களில் கூட்டம் அலைமோதும்!
அர்ச்சனைத் தட்டு வாங்கி வாங்கி!
அசந்து போவாரு கோயில் பூசாரி!
வயசுல இவள் கிழவி!
வசீகரத் துலஇளங் குமரி!
உலகத் தமிழர் செய்தியிலே!
உய்யாரமாய் இடம் பிடிப்பாள்!
மிஸ் யினிவர்ஸ் பட்டம்!
மிடுக்கான பொருத்த மிவளுக்கு!
செம்மொழிப் பட்டம் வென்ற!
சீர் மிகுசெந் தமிழுக்கு!
சித்திரையில் முத்திரைகள் பதித்து!
தை முதலுக்குக் கை நழுவும் கன்னியே!
இறுதியாய் உனக்கு ஏப்ரலில்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்னையே!!
ஜான் பீ. பெனடிக்ட்,!
வாசிங்டன்
ஜான் பீ. பெனடிக்ட்