இதயத்துள்ளிருந்து கவிதை வருவதை !
ஏதோவொன்று அடைத்துக் கொண்டிருக்கிறது. !
அகவெளியின் சஞ்சாரம் அற்றிருக்கிறேன. !
பழைய நண்பர்களைச் சந்திக்கையில் !
திரி தீண்டிய விளக்கொளி நெஞ்சத்தில். !
ஆத்மாவுக்கருகில் ஒலித்த குரல்கள் !
தொலைதூரங்களுக்குச் சிதறுண்டு போனபின் !
வாழ்க்கைக்கு மரணம் என்றொரு அர்த்தம் உள்ளதை உணர்கிறேன். !
தனித்து விடப்பட்ட மனிதர்களின் கண்கள் ஒளி மங்கிப் பஞ்சடைந்து வருகின்றன. !
துன்பம் பிரபஞ்சமயமாகி வருகிறது. !
பெரும் வனங்களும் சரிகின்றன. !
வெட்டுக்கட்டைகளின் மீதான வட்டவரிகளில் !
காட்டுப்பறவையின் ஏகாந்தம் எஞ்சியுள்ளது. !
விடுதலையை பாடும் எண்ணுக்கணக்கற்ற கவிஞர்களின் !
குரல்களுக்கிடையிலுள்ள இடைவெளியை நிரப்பிச்செல்லுமோ !
சத்தியநதி. !
ஐப்பசி - 1999 !
தேவஅபிரா puvanendran@home.nl !
!
***** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது !
கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, !
ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன
தேவஅபிரா