தோள்களில் அமர்ந்தி. . மழைப்பாடல் - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Marek Piwnicki on Unsplash

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்.. மழைப்பாடல் ..!
!
01.!
தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன் !
--------------------------------------------------------!
தோட்டத்துக் காவல்காரன்!
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்!
தனித்துவிழும் ஒற்றை இலை!
விருட்சத்தின் செய்தியொன்றை!
வேருக்கு எடுத்துவரும் !
மௌனத்திலும் தனிமையிலும்!
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்!
வந்தமர்ந்து காத்திருக்கிறான்!
இறப்பைக் கொண்டுவரும்!
கடவுளின் கூற்றுவன் !
நிலவுருகி நிலத்தில்!
விழட்டுமெனச் சபித்து!
விருட்சத்தை எரித்துவிடுகிறேன் !
மழை நனைத்த!
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்!
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது!
ஈரத்தில் தோய்ந்த!
ஏதோவொரு அழைப்பின் குரல் !
02.!
மழைப்பாடல் !
-------------------!
தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க!
சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும்!
இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி!
என்னை சிறையிலிட்டுக் கொண்டேன்!
வெளியேற முடியா வளி!
அறை முழுதும் நிரம்பி!
சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில்!
மூடியிருந்த யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி!
நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.