எனக்கே எனக்கானதாக மட்டும் - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Tengyart on Unsplash

உடைந்த வானத்தின் கீழ்!
நிலவு சலித்தனுப்பிய !
வெளிச்சத்தினூடு,!
உறுதியற்ற தேசத்தினொரு மூலையில்!
உடையாத வெட்கத்தை !
உறுதியான இறகுகளால் போர்த்தியபடி!
முன் காலமொன்றில்!
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சூழ!
தேவதையாக நான் நின்றிருந்தேன் !!
வேட்டைக்காரனாக நீ வந்தாய் ;!
என்னையும்,வெட்கத்தையும்!
மூடியிருந்த சிறகதனைக்!
கத்தரித்துக் காதில் சொன்னாய்-இனிக்!
காலம் முழுதும் !
உன் சிறகுகள் மட்டுமே !
போதுமெனைச் சுமக்கவென!
அழகிய வாக்குறுதிகள் தந்தாய் !!
அன்றிலிருந்துதான்!
உனது வலிமை மேலோங்கிய!
வேட்டைக்கரங்கள்,!
எனது சுவாசங்களையும்!
சிறிதுசிறிதாகக் கொடுக்கத்தொடங்கின !!
எனக்குப் பல்முளைத்த அன்றின் இரவில்!
தனியாக மெல்ல முடியுமினியென்றேன்,!
உனது அத்தனை அகோரங்களும்!
ஒன்றாய்ச் சேர்ந்து!
அன்றுதான் என் உதடுகளைத்!
தைக்க ஆரம்பித்தாய் !!
எழுதவேண்டுமென்ற பொழுதில்!
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்,!
வரைவதற்கான வண்ணங்களைக் !
கலந்த விரல்களை !
வளைத்துச் சிதைத்தாய்,!
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே!
நானூமை என!
சொல்லிச் சொல்லி ரசித்தாய் !!
இனிக் காலங்கள்!
எனக்கே எனக்கானதாக மட்டும் இருக்கட்டும் !!
இந்த வெடிப்புற்று வரண்டு,!
கதிர்களேதுமற்ற வயல்வெளியில்!
நேற்றிலிருந்து புதிதாக முளைக்க !
ஆரம்பித்திருக்கும் பற்களால்!
என் தீய கனவுகளை மென்று விழுங்கியபடி,!
உச்சரிப்புப் பிழைகளோ,சுருதி விலகலோ!
சுட்டிக்காட்ட யாருமின்றி...!
ஒரு பக்கம் எனது கவிதைகள்,!
மறு பக்கம் எனது வண்ணங்கள்!
எனத் துணையாய்க் கொண்டு!
பாடிக்கொண்டிருக்கிறேன் ;!
!
ஆனாலும்,!
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள் !!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.