விடைபெறும் நாளில்!
பெய்த மழை!
கிளப்பிவிட்டது!
மண் வாசனையோடு!
ஏதேதோ நினைவுகளை.!
கண்ணாடி ஜன்னலில்!
மழையின் ஈர விரல்கள்!
இட்ட கோலப்புள்ளிகள்!
கண்ணீர் துளிகளின்!
பிம்பங்கள் ஆயின.!
இதமான குளிர்!
சுகமாக்கியது!
நினைவுகளை.!
மழையுடன் வேகமெடுத்து!
பெய்தன நினைவுகள்.!
பெருமழை!
அரித்துச் சென்றது!
சில கோபங்களை!
சில வன்மங்களை!
பிரிவின் வாட்டத்தை!
இதப்படுத்தவே!
அமைந்தன போலும்!
சில வார்த்தைப் பறிமாற்றங்கள்!
சில உதவிகள்!
சில மன்னிப்புகள்!
சில மௌனங்கள்!
சில நிகழ்வுகள்.!
அனைத்தையும் ஈரப்படுத்தி!
புதுப்பித்தது மழை.!
நினைத்து நினைத்து!
சடாரென பெருமழையாகவும்!
ஆசுவாசப்படுத்திக்கொண்டு!
கொஞ்சம் தூறலாகவும்!
மாறி மாறிப் பெய்த மழை!
நின்றுப்போனது!
வானத்தை வெளுப்பாக்கிவிட்டு.!
அடுத்த மழை!
எப்போதென!
யாருக்கும் தெரியாது

எம்.அரவிந்தன்