சமரசம் உலாவுமிடமென்றார் !
சான்றோர், !
சாதிக்கொரு மயானம் வைத்துச் !
சண்டையிடுகிறாயே மனிதா…!!
விட்டுப் பார்ப்போம்…!
கட்டிப் பிடித்திருப்பதை !
விட்டு விட்டால் !
விழுந்துவிடுவோம் என்பது !
குட்டிக்கும் தெரியும் !
குரங்குக்கும் தெரியும்…! !
கெட்டதெனத் தெரிந்தும் !
கெட்டியாய்ப் பிடிக்கிறானே !
மனிதன், !
பட்டாலாவது திருந்துவானா !
விட்டுப் பார்த்தால்தான் !
விபரம் தெரியும்…!!
செண்பக ஜெகதீசன்