அரவிந்தன் கவிதைகள்!
மௌனத்தை!
கிழிக்கிற!
சத்தம் !
அடங்கியபின்!
அதை விட சத்தமாய்!
மீண்டும்!
அறையும்!
மௌனம்.!
---------------------!
குழந்தைகள்!
போட்டிக்கு இல்லாத!
இரவில்!
பூங்கா ஊஞ்சலில்!
ஆடுகிறது!
காற்று.!
----------------------!
இலை சிந்தும் !
மரமொன்றை!
படமாக!
வரைந்து வைத்தேன்!
அதை யார் யாரோ!
எடுத்துப் பார்க்கையிலெல்லாம்!
விழுந்தது!
இன்னுமொரு இலை
எம்.அரவிந்தன்