எங்கிருந்து வருகிறது.. காரணமில்லாமல் - சு.திரிவேணி, கொடுமுடி

Photo by Pat Whelen on Unsplash

01.!
எங்கிருந்து வருகிறது? !
---------------------------!
இந்த முறையும் !
நிகழ்ந்தே விட்டது. !
எப்படியோ ஒவ்வொரு !
தடவையும் தவறி விடுகிறது !
என் மகனுக்கான முதல் பரிசு. !
குழந்தை முகம் வாடிப் போகுமென்ற !
கவலை முள்ளாய்க் கீறியது. !
ஆதரவாய் அணைத்துக் !
கொள்ள வேண்டும். !
பூவை வருடும் தென்றலாய் !
மெல்லத் தலையைக் !
கோதி விட வேண்டும். !
நீ நன்றாகத்தான் செய்தாய் என !
மனம் தேற்ற வேண்டும். !
இரண்டாம் பரிசுக் கோப்பைதான் !
அழகாய் இருப்பதாகச் !
சத்தியம் செய்ய வேண்டும். !
சூழ்ந்து வரும் மலர் முகங்களில் !
என் மழலை முகம் தென்படுகிறதா !
எனத் தேடத் துவங்கினேன். !
சமாதான ஒத்திகைகளோடு !
தேடிய நான் திகைத்துப் போனேன்! !
இயல்பாய் அவன் தேற்றிக் கொண்டிருந்தான் !
மூன்றாம் பரிசுக் குழந்தையை!! !
குழந்தமையில் பெருந்தன்மையும் !
பெரியவர்களிடையே குழந்தைதன்மையும் !
எங்கிருந்து தான் வருகிறது??? !
!
02.!
காரணமில்லாமல்... !
---------------------------!
எப்போதும் வருவதில்லை மழை !
மழை வேண்டும் உழவர்கள் !
மனம் கனத்துக் !
காத்திருக்கும் சூழல்களில் !
அதன் சுவடே தெரிவதில்லை. !
நனையக் காத்திருக்கும்!
சிறுவர்கள் விருப்பமும் !
அதற்கொரு பொருட்டல்ல. !
தாகம் தீர்க்கும் நதி !
தாகம் கொண்ட பொழுதுகளில் !
அது தலை காட்டுவதுமில்லை. !
கட்டிடக் கூட்டுக்குள் !
பதுங்கித் திட்டும் !
மனிதர்களைக் காணவும் !
சாக்கடையோடு இணைந்து !
சாலைகளில் ஓடவும்!
கனத்த மழைக்கோட்டுகளில்!
ஒலியெழுப்பவுமே !
ஆசைகொண்டு எப்போதும் !
நகரங்களில் தன்னைக் !
கொட்டித் தீர்க்கிறது !
காரணமுமில்லாமல் !
காரியமுமில்லாமல்
சு.திரிவேணி, கொடுமுடி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.