வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட !
உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று !
கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன. !
அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை !
அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று. !
பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த !
கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம். !
உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம் !
அழியாது, என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று !
நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும் !
இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்
சமீலா யூசுப் அலி, மாவனல்லை