மனிதர்கள் பலவிதம் - சித. அருணாசலம்

Photo by Marek Piwnicki on Unsplash

நிலை தாழ்ந்து!
சோம்பலைச் சுமந்து!
காலத்தின் மீது !
பழி சுமத்துபவன்!
முன்னேற்றத்திற்குத் தானே!
முட்டுக்கட்டையாய் இருப்பான்.!
சாதாரண மனிதன்!
கனிந்து போய் விழும்!
பழத்திற்குப்!
பார்த்திருப்பது போல்!
சாதகமாய் வரும்!
சந்தர்ப்பத்திற்காய்!
காத்திருப்பான்.!
இலக்கை நிர்ணயித்து,!
லட்சியத்தை மனதிலும்,!
முயற்சியை செயலிலும்!
முடிவாக்கிய மனிதன்!
சந்தர்ப்பங்களை உருவாக்கி!
சாதித்துக் காட்டுவான்.!
!
- சித. அருணாசலம்
சித. அருணாசலம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.