01.!
பூக்கட்டும் புதிய புன்னகை!
-------------------------------------!
பூக்கட்டும் புதிய புன்னகை!
பூ விலங்குகள் அழியட்டும்!
ஒழியட்டும் ஒப்பாத கடமைகள்!
உணரட்டும் புதிய உலகினை!
கதவுகள் இங்கெதற்கு!
கயவர்கள் அழிந்தபின்னர்!
கடமைகள் இங்கெதற்கு!
உணர்வுகள் உணர்ந்த பின்னர்!
இருட்டினில் கோப்பெதர்க்கு!
இந்தியர் விழித்துவிட!
பகட்டினில் வாழ்வெதற்கு!
பட்டினிச் சாவிருக்க!
பகற்பொழுது தேவையில்லை!
பகலவன் உலா வர!
வழித் துணை தேவையில்லை!
மகேசன் பவனி வர!
பூக்கட்டும் புதிய புன்னகை!
பூவுலகு மீட்சி பெற!
உதிக்கட்டும் புதிய விதிமுறை!
அரசியலும் தூய்மை பெற!
இருட்டினில் சட்ட இயற்றலோ!
வெளிச்சம் கொண்டாருங்கள்!
குறைகள் நிறைய இருக்கலாம்!
வெளிச்சத்தில் செயல்படுங்கள்!
பூக்கட்டும் புதிய புன்னகை!
புவியாளும் மன்னர்கள் மத்தியில்!
தேர்தலுக்கு வாக்களித்தால்!
முடியுமா மண்ணாலும் மன்னர் கடன்!
மடியட்டும் பழைய விதிமுறை!
தேர்தலுக்கு மட்டும் மன்னர் வரும் முறை!
வெளிவிடுங்கள் ஆட்சி முறையினை!
மன்னரும் அறிந்து கொள்ளட்டும்!
பூக்கட்டும் புதிய புன்னகை!
புகைந்து வாழும் மனிதர் வாழ்விலும்!
பட்டினிச் சாவிருக்க!
பகட்டான வாழ்வெதற்கு!
பகலவன் வந்தபின்னும்!
இருட்டறையில் கோப்பெதர்க்கு !
02.!
ஏன் சினம்!
-----------------!
சினத்தினை அழிக்கவல்ல!
சிறு துளி நஞ்சிருந்தால் -என்!
சிந்தைக்கு அளித்திடுங்கள்!
அகத்தினில் மகிழ்ந்திடுவேன்!
ஏழ்மைக்கு வாழ்க்கைப்பட்ட!
ஏழைக்குப் பிறந்திட்டதால்!
கூழுக்குக் கவலைப்பட்டே!
இளமை கழிந்ததுவே!
சினமென்றும் கொண்டதில்லை!
வயிற்றுப் பசியிருக்க!
சிறுவயது கழிந்துவிட!
கை கொண்டே உழைத்து நானும்!
கனவுகள் வளர்த்துக்கொண்டேன்!
மணம் கொண்ட மங்கை நல்லாள்!
மகிழ்ந்திருக்க குழந்தைகள்!
என்வாழ்வும் வளம் கொள்ள!
சிறு பிழையும் சேர்ந்திடவே!
சிறுகுழந்தை வயதுவந்து!
வாழ்வும் தேடிடவே!
சினம் எனைச் சேர்ந்திடுதே!
அவன் வழி அவன் தேட!
என் மனம்!
ஏன் கொள்ளுது பெருஞ்சினம்
சின்னு (சிவப்பிரகாசம்)