நீ!
சிந்திய சிரிப்புகளையெல்லாம்!
சேமித்துவைத்திருந்தேன்!
இரண்டுவருடசேமிப்பை!
எடுத்துப்பார்க்கிறேன்.!
எதிலுமே!
என் பெயரில்லை!
என் பக்கத்தில் நின்றவர்களை!
பார்த்து சிரித்தது பல!
என் முன்!
நின்றவர்களுக்காய் சில!
பின்!
நின்றவர்களுக்காய் சில!
எவரையோ எண்ணியபடி!
எனை பார்த்து!
சிந்தியவை சில!
எல்லாவற்றையும்!
கழித்தபோது!
எஞ்சியவை!
எனக்காக சில!
ஏளன புன்னகைகள்!
என்!
மனக்காயங்களுக்கு-அவை!
மருந்தா,!
திராவகமா தெரியவில்லை!
ஆனாலும்!
அள்ளி அள்ளி!
பூசிக்கொள்கிறேன்.!
இதயத்தில்!
உன் பெயரையும்!
உயிரில்!
உன் முகவரியையும்!
சுமந்தபடி
சிலம்பூர் யுகா துபாய்