(ஒரு எத்தியோப்பியனின் இரங்கல்)!
நாங்களும்!
மண்ணும் ஒன்றுதான்!
மக்கியதுணிகளை!
உண்பதினால்..!
வறுமையின்!
கண்காட்சியில்!
பசியைஉடுத்தியபடி!!
எங்களிடம்!
இனி என்னயிருக்கிறது!
இழப்பதற்கு!
உயிரையும்,!
பசியையும்தவிர.!
கண்ணியம்,!
கட்டுப்பாடு,!
கற்பு!
என்பதெல்லாம்!
கொழுப்புமிகுந்தவர்களுக்கு!
வயிறு நிறைந்தவனால்!
வலியுறுத்தப்படுவது!!
எங்களுக்கு!
இதைப்பறியெல்லாம்!
கவலைப்பட!
என்னயிருக்கிறது!
வறுமையே!
தேசியமாய் ஆனபோது!!
பகிர்ந்துண்ணும்!
பழக்கத்தை!
இன்னும்!
மானுடம்படிக்கவில்லை.!
கடவுளே!
சிலிக்கன்மண்ணின்!
சிறப்பை!
அவனிக்கு!
அறியக்கொடுத்தது மாதிரி!
பாலைவன மண்ணுக்குள்ளும்!
எதையாவது!
பதுக்கிவைத்திருப்பாயே!
இன்றே அதை!
மானுடத்திற்கு!
அறியக்கொடேன்!!
பாவம் அவர்கள்!
உயிர்வாழ்ந்துபோகட்டும்.!
கொடுமை இறைவா!
பசியே!
மரணமாவது.!
கொடுமையிலும் கொடுமை!
அதுவே தொடர்வது

சிலம்பூர் யுகா துபாய்