முடிவற்றுத் திறக்கிறது!
நமது இரகசியங்களின்!
உள்ளறைகள்!
ஒரு புள்ளியில் தொடங்கும்!
நம் கதைச்சித்திரம்!
மீண்டும் அந்தப் புள்ளியில்!
கால் புதைக்கிறது!
சுவாரசியங்களில்!
பொழுதுகள் தின்னப்பட!
நமது கதிரைகளைக் !
கதைகள் நிறைக்கின்றன!
காற்று கேசத்தைத் தொட்டு!
வருடிச் செல்லும் உணர்வில்!
தொற்றிக் கொள்ளும் சொற்கள்!
இறுகக் கைபற்றி!
என் முகம் பார்க்கின்றது!
!
இழை பிரிந்த !
மௌனங்களிடம் !
காயங்கள் ஏதும் இருக்குமேவென்று!
நான் கவலைப்பட ,!
நீ சிரித்த சிரிப்பில்!
மின்னல் வெட்டியது!
மழை பொழிந்தது!
மழை நனைத்த நிலமாய்க்!
குளிர்ந்தது கால்!
கைகளின் நடுக்கத்தை மறைக்க!
காற்சட்டைப் பொக்கற்றுக்குள் கைநுழைத்து!
வான் பார்த்தோன் பார்!
- த. அஜந்தகுமார்
த. அஜந்தகுமார்