(India shining) !
----------------------------------- !
குஜராத் பெரு நெருப்பின் வெளிச்சத்தில் !
இந்தியா ஒளிர்கிறது !
ஒரிஸ்ஸாவில் பாதிரியும் பிள்ளைகளும் !
ஜீப்போடு எரிக்கப்பட்ட வெளிச்சத்தில் !
இந்தியா ஒளிர்கிறது !
இராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட !
கன்னிகாஸ்திரிகளின் !
கண்ணீரின் பிரதிபலிப்பில் !
இந்தியா ஒளிர்கிறது !
மதவெறியை வாக்குகளாக்கி !
மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க !
பேயாய் அலையும் !
அரசியல்வாதிகளின் கண்களில் !
இந்தியா இன்னும் ஒளிர்கிறது !
-தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

சேயோன் யாழ்வேந்தன்