தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

துயரின் தொடக்கம்

த.அகிலன்
எப்போதும் !
ஏதேனுமொரு !
புன்னகையிலிருந்தே !
ஆரம்பிக்கிறது துயரம் !
ஓர் !
புன்னகையில் இருந்து !
மற்றுமோர்!
புன்னகைக்கு !
வழிநெடுக !
புன்னகைகளை !
வாரியணைத்தபடியும் !
ஒவ்வோர் !
புன்னகையின் !
முகத்திலும் !
தன்னை !
அறைந்தபடியும் !
பயணிக்கிறது !
துயரம் !
அது தன் !
தீராக்காதலோடு !
தொடர்ந்தும் இயங்கும் !
இன்னொரு !
புன்னகையைநோக்கி !
!
-த.அகிலன்

தூறல் கவிதை... 365 ஆவது நாள்

முத்துவேல்.ச
தூறல் கவிதை!
*நேற்றிரவு பார்க்கத்!
தவறிய மழை!
கண்ணில் படும்!
நிலப்பரப்பெங்கும்!
தன் ஆளுமையை நிறுவியிருந்தது!
கம்பி வேலியில்!
செடி ,கொடிகளில்!
முத்து முத்தாக...!
ஒரு குறுமரத்தின்!
கீழே நின்று!
ஒருமுறை உலுக்கிவிட்டு!
லேசாய்!
நனைந்து கொண்டபோது!
ஈரம் சுமந்த மனம்!
ஏன் லேசானது?!
!
உன்னருகில் நான்!
உன் பெரிய கரிய!
விழிகள்!
எப்போதும் மிரண்டு!
மருண்டிருப்பது!
கொள்ளை அழகு...!
இன்னும் அழகு!
கருவிழிப் படலத்தில்!
நான்மிதக்கும்போது.!
ஹைக்கூ கவிதைகள்!
நானும் எடுக்கவில்லை!
சாலையில் நாலணா!
நாலணா என்பதால்!
!
கதவு திறந்ததும்!
தப்பியோடிய கரப்பான்!
தண்ணீரில் விழுகிறது!
!
காணாமல் போனவனை!
பிடித்து வைத்துள்ளது!
புகைப் படம்!
!
365 ஆவது நாள்!
காற்றில் படபடக்கும் தாள்கள் தாங்கிய!
நாட்காட்டிகள் ஒவ்வொரு அறையிலும்!
தேவைக்கும் அதிகமாகவே...!
வணிக உத்தியாய் வந்தவை சில...!
அன்பளிப்பாய் வந்தவை சில...!
அன்பளிப்பு என்ற பெயரில் சில...!
புகைப்படத்தில் சிரிக்கும்!
ஊர் பெரும்புள்ளியின்!
கூப்பிய கரங்களுக்குள்!
குறுவாள் ஒளிந்திருக்கலாம்,!
குருதிக் கறையோடு...!
எவ் வருடத்திற்கும் பொருந்தும் வகையில்!
ப்ளாஸ்டிக் நாட்காட்டி ஒன்று மட்டும்!
எப்போதும் ஒரே நாளை காட்டிக்கொண்டிருப்பது!
இல்லத்து அரசியின் ஏற்பாடு...!
ஒரு நாளைக்கு இருமுறை!
சரியாய் மணிகாட்டும்!
ஓடாத கடிகாரம்!
எவ்வளவோ தேவலாம்!
வருடத்தில் ஒருநாள் மட்டும்!
சரியாய் நாள்காட்டும்!
இந் நாட்காட்டியை விட...!
மாற்றப்படாத அந்நாள்!
மறந்துவிடக்கூடாது!
என்பதற்காக அல்லவாம்!
நினைத்துக் கொண்டே இருக்கத்தானாம்...!
அப்படி என்ன சிறப்பு !!
அந்த ஒரு நாளில் மட்டும் ?!
இப்போதும் நீங்கள்!
அவள் வீட்டிற்குச் சென்றால் பார்க்கலாம்!
உப்புச் சப்பில்லாததற்கெல்லாம்!
திட்டிக்கொண்டிருக்கும் அவள் கணவனையும்!
அவன் பிறந்த நாளுக்காய் காத்துக்கொண்டிருக்கும்!
அவளையும்,அந்த நாட்காட்டியையும்

இந்த நிஜமான உணர்வு

நவஜோதி ஜோகரட்னம்
உனக்கும்!
எனக்குமான!
இந்த நிஜமான உணர்வு!
எப்போதும்!
புதுமையான ஒன்றாக!
அதீதத்துக்குரியதாக!
அழகானதாக!
ஆசையானதாக!
அழுவதாக!
இளமையடைவதாக!
குழந்தையைப்போலதாக!
கலைத்தோய்வு உள்ளதாக!
உணர்ச்சிவசப்பட்டதாக!
உயிர்ப்புள்ளதாக!
உற்சாகம் நிறைந்ததாக!
உறங்கிப்போவதாக!
பறப்பதாக!
பரிதாபகரமானதாக!
புன்னகையுடையதாக!
மௌனமானதாக!
மென்மையாக!
கண்காணிக்கப்படுவதாக!
கனவுகாண்பதாக!
பகல்பொழுதாக!
விழித்துக்கொள்வதாக!
வயப்படுவதாக!
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதாக!
ஒரு இருத்தலியாக!
வாழ்ந்துகொண்டிருக்கிறதாக!
கொடியதாக!
பிடிவாதமாக!
பொறாமையுடையதாக!
மூப்படைவதாக!
புண்படுத்துவதாக!
நம்பிக்கையிழந்ததாக!
நடுக்கமுடையதாக!
சிரிப்புடையதாக!
மோசமானதாக!
மிருதுவானதாக!
முட்டாள்தனமாக!
மறக்கப்படுகின்றதாக!
மறுக்கப்படுகின்றதாக!
துரத்தப்படுகின்றதாக!
தொடரப்படுகின்றதாக!
நிஜமானதாக!
நினைவிருக்கிறதானதாக!
உனக்கானதாக!
எனக்கானதாக!
இருவருக்குமானதாக!
இல்லை!
அனைவருடையதானதாகவும்...!
தனித்தவமானதான!
நீயும்!
நானும்!
நாமிருவரும்!
போகலாம்!
வரலாம்!
இந்த நிஜமான உணர்வில்

வெறுத்துப்போதல்

முஹம்மட் மஜிஸ்
வலி மிகைத்து!
ஆக்ரோஷமாய்!
மெல்லிய படர்தலின்!
இடர்பாட்டில்!
தோற்றன கனவுகள்!
மெய்களை கடந்த!
பொய்கள் அதன்!
ஆழங்களையும் அகலங்களையும்!
ஜடம் மறைத்து!
உயிர்த்தது!
சயனம்!
சபித்த இருள்கள்!
சூனியத்தை ஜெயித்தன!
சுயம் வன்மைகளை!
கௌரவிக்க பழகின!
ஜனநாயம்!
குரல் நெறித்து!
தற்கொலை செய்தன!
தலைகள் வெறுத்து!
கிரிடம் கால்களிலே!
பாவம் நான்!
தனியாகத்தான்!
நிற்கிறேன்!
வாக்கு நிராகரித்தோர்!
பட்டியலில்

அவள் இல்லாமையின் வெளிச்சம்

அசரீரி
அறிவிப்பேயில்லாமல் கரண்ட் போனது போலதான்!
என் வானப் பேப்பர்!
திடீரெனக்கறுப்பாகி வெறுமையாகிப் போனது!
ஒரு மின்னல்!
வெட்டியது போல இருந்தது!
அன்றிரவு!
உன்னைப் பற்றிய கவிதைகளும்!
நட்சத்திரங்தளுமாக இருந்த எல்லாம்!
நூர்ந்து வெற்றாகிப் போயிற்று .!
மின்னாமல் தொடர்ந்து பத்துமே!
அந்தப் பெரிய வெள்ளி!
அதையும் கள்ளத்தனமாக!
கவிதைக்குள்தான் ஒளித்து வைத்திருந்தேன்!
உனக்கும் தெரியாது!
அதுவும் சேர்ந்துதான் இல்லாமலாகியிருக்கிறது.!
அப்பாடா உன்னைப்பற்றிய!
ஒன்றுமேயில்லை!
இப்போதிருந்து என்னிடம்!
ஊர்க் கடற்கரையில்!
வெள்ளிக்கிழமை கழியும் போதோ,!
காட்டுத்தேங்கா மரத்தடியை!
சைக்கிளில் தாண்டும் போதோ,!
மெத்தைப்பள்ளி மூலைச்சந்தில்!
மெல்லத் திரும்பும் போதோ!
உன் முக்காட்டுக்கூரிலிருந்து கொட்டிய!
எந்த கவிதைத் துண்டுகளிலும்!
என் சைக்கிள் மூச்சை இழக்காது இனி..!
!
இனி நான் உரிமையுடன் அழைக்கலாம்!
சூரியன் வாங்க!
சேர்ந்தே எரிவோம்!
பாதிக்கு நீங்களும் பாதிக்கு நானுமாக இணைந்து!
உலகத்தில்!
அவளின் இல்லாமையின் வெளிச்சம்!
என்னை முழுக்கப்படர்ந்திருக்கிறது இப்போது!
!
-அசரீரி

சுருக்குப்பை

சொ.சாந்தி
அழகழகு வண்ணத்திலே!
பூப்போட்ட ஒட்டுத்துணி!
கச்சிதமா தச்சி வெச்ச!
அந்தக்கால மணிபர்சு..!!!
அஞ்சுகாசு... பத்துகாசு..!
நாலணா எட்டணான்னு!
பாட்டியோட சுருக்குப் பையி!
பாக்க ஒரு குட்டி வங்கி...!!!
வெத்தல பாக்குவாசம்!
மணமணக்கும் பையிலதான்!
பல்லுகுத்தும் குச்சியோட!
அடமான சீட்டிருக்கும்..!!!
நெடியோட பொடிடப்பா!
பொட்டலமா விபூதியுந்தான்!
பிதுங்கி வழியும் சுருக்குப் பையி!
பாட்டியோட பொக்கிஷந்தான்..!!!
வீதிதோறும் கூவிக்..கூவி...!
கீரை வித்த காசிருக்கும்!
பாட்டி நடக்கையிலே !
பையி பக்கதாளம் போட்டிருக்கும்..!!!
பாசமான பாட்டிக்கிட்ட!
மிட்டாய் வாங்க துட்டு கேட்டா - அவ!
சுருக்குப் பையில் கையவிட்டு !
தந்த காசில் அன்பிருக்கும்...!!!
பாட்டி இடுப்பு சுருக்குப் பையி!
அழகான தொப்பை வங்கி!
எப்ப வேணா காசு தரும்!
எங்களுக்கு அந்தக்கால ஏ.டி.எம்மு..!!!
டூரிங் டாக்கீஸ் போவதற்கும்!
துட்டு தரும் நல்ல வங்கி!
பாட்டி ஆசிர்வதிக்கையிலும்!
அள்ளித்தர கல்லாப்பெட்டி...!!!
துன்பமின்னு வந்துவிட்டா!
வீட்டு நகை தூங்கப் போகும் - நகை!
தூங்க நல்ல பஞ்சனதான்!
வங்கியில சுருக்குப் பையி...!!!
ஒளிவு மறைவு வணிகத்தில!
ஒசந்திருக்கும் சுருக்குப் பையி!
வைரம் மின்னும் அந்தப் பையின்!
விவரம் மட்டும் ரகசியந்தான்..!!!
அந்தக்கால சுருக்குப் பையில்!
அன்போட கனமிருக்கும்!
இந்தக்கால மணிபர்சில்!
மாண்டுபோச்சு மனித நேயம்...!!!
அள்ளித் தந்த சுருக்குப்பையி!
போனதெங்கோ தெரியவில்ல..!
மணிபர்சு கனகனத்தும்!
நல்ல மனசுமட்டும் காணவில்ல

அலைகளின் விளிம்பில்

நீதீ
ஜனனித்த தருணத்திலே!
எழுதியேனும் வைக்கப்பட்டதோ!
எங்களின் சுவாசிப்புகள்?!
மருந்துக்களின் நெடியினூடே!
இருதுருவங்களின் ஈர்ப்புகளால்!
இடமா வலமா எனும் யோசனையில்!
சமுத்திரத்தின் நிச்சயனத்தினூடே!
மர்மமான முறையில் தொடர!
எனக்களிக்கப்பட்ட வீடோ!
ஆர்பரிக்கும் அலைகளினூடே!
கடவுளின் கண்ணீர்துளியாய்!
காட்சிதருகிறது!!
கட்டப்பட்ட கடவுளின் கையை!
மௌனமாக உலகம்!
பார்த்துக் கொண்டிருக்கிறது!
!
ஆக்கம்: நீதீ

வேண்டும்....?

கவிவள்ளி
தேடவேண்டும்!
தெலைந்த மொழியை...!
அதிகார வர்கத்தினால்!
ஆளுமை கொண்டுருப்பது!!
இன்றைய மொழி !
மணவயதை கடந்தால்!
முதிர்கன்னியாம்...!
இணையாக?!
தேடவேண்டும்!
தெலைந்த மொழியை!
மணமுடிந்த மறு!
மாதமே இல்லையெனில்!
மலடியாம்...!
இணையாக? !
தேடவேண்டும்!
தொலைந்த மொழியை!
கட்டியவனை காலன்!
கொண்டால்!
கைம்பெண், விதவை... !
இணையாக? !
தேடவேண்டும்!
தெலைந்த மொழியை!
தனிவுடமையானவள்!
விதிவசத்தால்!
பொதுவுடமையானால்!
வேசி, விபச்சாரி...!
இணையாக? !
தேடவேண்டும்!
தெலைந்த மொழியை!
எகிப்தின் மம்மிகள் போல்!
தோண்டப்பட வேண்டும்!
இல்லையேல்.... !
உருவாக்கப்பட வேண்டும்!
பவித்திரமான புதுமொழியை! !
-- கவி.வள்ளி!
புதுச்சேரி

3 கவிதைகள்

நிர்வாணி
1. !
காதல் விசமென்று சொன்னார்கள் !
நான் அவர்களைப் பைத்தியக்காரர்களென்றேன் !
காதல் அமிர்தமென்றார்கள் !
ருசித்துப்பாத்தேன் !
தயவுசெய்து என்னிடம் !
காதலென்றால் என்னவென்று !
கேட்காதீர்கள் !
ஏனெனில் உணர்வுகளேயில்லாத !
உடலுக்குள் நான் !
!
2. !
இதயத்தில் இருந்து வெளியேறிய !
மின்னலையொன்று !
எவளோ ஒருத்தியின் இதயத்தில் !
எப்படியோ ஊடுருவி !
பதிலாக வந்த அந்த மின்னலைதான் !
காதல் !
3. !
காதல் !
எப்படி எங்கே யாருடன் !
எதுவுமே தெரியாமல் !
எதையும் தெரியாத உள்ளங்களும் !
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத !
ஏதோ ஒரு இன்பத்தை !
நோக்கிச்செல்லும்

உனது நினைவுகள் துயிலெழுப்பும்

நிந்தவூர் ஷிப்லி
அதிகாலை !
-------------------------------------------------!
!
மனசு இயல்பற்றிருக்கும் இந்த!
அதிகாலைப்பனிப்பொழுதில்!
சடுதியாய் கண் விழித்து!
எதைப்பற்றி எழுதுவது...??!
திரும்பத்திரும்ப என் மனம் நனைக்கும்!
உனதான பிரிவின் மீள முடியாப்பெருந்துயரம்!
ஒரு பாம்பைப்போல என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது..!
பிரக்ஞையற்றுப்போன உனது இருத்தலின்!
தொலைந்து போன புள்ளியில்!
எனது உயிர் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது...!
காலத்தின் மீது எனது வெறுப்பை!
துரிதமாக எறிந்து கொண்டிருக்கிறேன்..!
அதுதானே உன்னை எங்கேயோ!
என்னை எங்கேயோ..!
நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது...?!
விடையேதுமற்ற பல்லாயிரம்!
வினாக்களை சுமந்தலையும்!
ஒரு ஒற்றைப்பறவையின் ஏகாந்த ஏக்கங்களென!
எனக்குள் மட்டும் அதிர்ந்தடங்கும்!
உன் பிரிவின் ஆற்றாமையை!
இன்னும் எப்படியெல்லாம் நானுரைப்பேன்..??!
உன் பற்றியெழும் சுகமான நினைவுகள்!
காட்டுத்தீயென கண்டபடி என்னை!
சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி கருக்கி....!
அடிக்கடி என்னைத்துயிலெழுப்பும்!
உன் நினைவுகள் நனைக்கும் இந்த அதிகாலைப்பொழுதில்!
வெளியே பொழிந்து கொண்டிருக்கும்!
தூறல் மழையை கொஞ்சமேனும் ரசிக்க விடாமல்!
உலுக்கி எடுக்கிறது உனதான அத்தனையும்...!
சிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்!
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்!
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்....!
-நிந்தவூர் ஷிப்லி