தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

கவிதையின் காதல்

கீதையின் நாயகன்

விடியலில் வேகம் தெரிகிறது!
இரவு நீளமாய் இருக்கிறது !
நிலவின் பொறுமை புரிகிறது!
கனவுகளின் முகவரி தெரிகிறது!
தூக்கம் தானாய் தொலைகிறது!
தென்றலின் அமைதி புரிகிறது!
கண்ணாடியின் அர்த்தம் விளங்கியது!
அட , எனக்கும் கவிதை வருகிறதே !!
ஓ ... என்னுள் காதல் பூத்துள்ளதா....?!!
-கீதையின் நாயகன்

சமீபத்திய கவிதை

வலுக்கட்டாயமாக ஒரு முத்தம்

குரு

அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்..

வலுக்கட்டாயமாக
ஒரு முத்தம்...

மண்ணில் மழைத்துளி

குறிப்பில்லாக் கவிதை (random)

இவ்விடம்

சல்மா

 இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது

நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம்
எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை