தூறல் கவிதை!
*நேற்றிரவு பார்க்கத்!
தவறிய மழை!
கண்ணில் படும்!
நிலப்பரப்பெங்கும்!
தன் ஆளுமையை நிறுவியிருந்தது!
கம்பி வேலியில்!
செடி ,கொடிகளில்!
முத்து முத்தாக...!
ஒரு குறுமரத்தின்!
கீழே நின்று!
ஒருமுறை உலுக்கிவிட்டு!
லேசாய்!
நனைந்து கொண்டபோது!
ஈரம் சுமந்த மனம்!
ஏன் லேசானது?!
!
உன்னருகில் நான்!
உன் பெரிய கரிய!
விழிகள்!
எப்போதும் மிரண்டு!
மருண்டிருப்பது!
கொள்ளை அழகு...!
இன்னும் அழகு!
கருவிழிப் படலத்தில்!
நான்மிதக்கும்போது.!
ஹைக்கூ கவிதைகள்!
நானும் எடுக்கவில்லை!
சாலையில் நாலணா!
நாலணா என்பதால்!
!
கதவு திறந்ததும்!
தப்பியோடிய கரப்பான்!
தண்ணீரில் விழுகிறது!
!
காணாமல் போனவனை!
பிடித்து வைத்துள்ளது!
புகைப் படம்!
!
365 ஆவது நாள்!
காற்றில் படபடக்கும் தாள்கள் தாங்கிய!
நாட்காட்டிகள் ஒவ்வொரு அறையிலும்!
தேவைக்கும் அதிகமாகவே...!
வணிக உத்தியாய் வந்தவை சில...!
அன்பளிப்பாய் வந்தவை சில...!
அன்பளிப்பு என்ற பெயரில் சில...!
புகைப்படத்தில் சிரிக்கும்!
ஊர் பெரும்புள்ளியின்!
கூப்பிய கரங்களுக்குள்!
குறுவாள் ஒளிந்திருக்கலாம்,!
குருதிக் கறையோடு...!
எவ் வருடத்திற்கும் பொருந்தும் வகையில்!
ப்ளாஸ்டிக் நாட்காட்டி ஒன்று மட்டும்!
எப்போதும் ஒரே நாளை காட்டிக்கொண்டிருப்பது!
இல்லத்து அரசியின் ஏற்பாடு...!
ஒரு நாளைக்கு இருமுறை!
சரியாய் மணிகாட்டும்!
ஓடாத கடிகாரம்!
எவ்வளவோ தேவலாம்!
வருடத்தில் ஒருநாள் மட்டும்!
சரியாய் நாள்காட்டும்!
இந் நாட்காட்டியை விட...!
மாற்றப்படாத அந்நாள்!
மறந்துவிடக்கூடாது!
என்பதற்காக அல்லவாம்!
நினைத்துக் கொண்டே இருக்கத்தானாம்...!
அப்படி என்ன சிறப்பு !!
அந்த ஒரு நாளில் மட்டும் ?!
இப்போதும் நீங்கள்!
அவள் வீட்டிற்குச் சென்றால் பார்க்கலாம்!
உப்புச் சப்பில்லாததற்கெல்லாம்!
திட்டிக்கொண்டிருக்கும் அவள் கணவனையும்!
அவன் பிறந்த நாளுக்காய் காத்துக்கொண்டிருக்கும்!
அவளையும்,அந்த நாட்காட்டியையும்

முத்துவேல்.ச