தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மேமன்கவியின் மூன்று கவிதகள்

மேமன்கவி
மேமன்கவியின் மூன்று!
கவிதகள்!
-மேமன்கவி-!
!
1!
வன்முறை யுகத்தில்!
என் முறை எப்பொழுது!
2!
என் கடவுளுக்கு!
மதம் பிடிப்பதில்லை!
3!
'குறி' களை!
குறித்து சிந்திக்கும்!
குறித்த!
வெறிப் பிடித்த!
நரிகள!
குறி வைத்து!
சுட தயார் நிலயில்!
என் குறிக்கோள் துப்பாக்கி.!
20.04.20065

நம்பிக்கை ஒளி

செந்தணல்
நான் பறக்கத் துடிக்கிறேன்... !
என்னால் முடியவில்லை. !
என் கைகளும், கால்களும் !
பிணைக்கப்பட்டு !
சிரசிலே முள்முடி தா¤க்க !
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். !
ஏன் முழச்சக்தியையும் திரட்டி !
நான் பறக்கத் துடிக்கின்றேன் !
ஏன்னால் முடியவில்லை. !
ஓடுக்குமறைகள் என் !
குரல்வளையை நெரிக்கின்றன. !
மூடநம்பிக்கைகளோ என் மேனிமீது !
பாம்புகளாய் நெளிகின்றன. !
சாக்கடை நாற்றத்தை விஞ்சிய !
துவாடை என் நாசிகளை !
மூச்சு முட்ட முனைகின்றது. !
--செந்தணல் !
நன்றி: எழுதாத உன் கவிதை !
தமிழீழப் பெண்களின் கவிதைகள்

நல்லது எது?

மு. பழனியப்பன்
எது நல்லது!
பொறுத்துப் போவதா?!
பொங்கி எழுவதா?!
தன்மானம்!
சுய அறிவு!
இவற்றை!
ஒதுக்கி வைத்துவிட்டுப்!
பொறுத்துப்போக இயலுமா?!
குடும்பம்!
அலுவலகம்!
சமூகம்!
அனைத்தும்!
பொறுத்துப்போகவே!
எதிர்பார்க்கின்றன!
சொல்லித்தருகின்றன!
வீண்பகை!
கோபக்காரன் என்ற பட்டம்!
இவற்றை ஏற்க மறுத்து!
பொறுத்துப் போக வேண்டுமா?!
பொங்கி எழுபவர்களின்!
எண்ணிக்கை!
விரல்விட்டு எண்ணுமளவில்!
இருக்க!
பொறுத்துப்போவதே!
சரியானது என!
விரும்புகிறது மனது!
சுட்டிக் காட்டப்படும்!
குற்றங்கள்!
குற்றவாளிகள்!
விடுதலையாய் நிற்க!
வெறுத்துப் போய்!
நிற்கிறது மனம்!
ஆள்!
அம்பு!
படை!
பலம்!
இவை!
அடிப்படை நியாயங்களைக் கூட!
அலட்சியப் படுத்தும்போது!
பொங்கி எழுகிறது மனம்!
கல்லில் முட்டி மோதி!
காயமே மிச்சம்!
என்ற அனுபவப் பாடம்!
பொறுத்துப் போகச் சொல்கிறது!
எது நல்லது!
பொறுத்துப்போவதா?!
பொங்கி எழுவதா?!
-மு.பழனியப்பன்

பாலபாரதியின் காதல் கவிதைகள்

பாலபாரதி
விரல் பிடித்து !
நுகர்ந்து பார்க்கிறாய் !
சிகரெட்டின் வாசத்தை !
நீயிட்ட கட்டளையை !
மீறி விட்டதற்காய் !
போபம் கொள்கிறாய் !
மௌனத்தை விழுங்கியவனாய் !
வேண்டி நிற்கிறேன் !
நாற்றமடிக்காத சிகரெட்டுக்கும் !
வாசம் நுகராத நாசிக்குமாய் !
-------------- !
!
என்னை அழி !
அல்லது !
புறந்தள்ளி கழி !
மகிழ்ச்சி தானெனக்கு !
அழிக்க முயன்றால் !
மூளையில் இருக்கிறேனென உணர் !
கழிக்க முயன்றால் !
இதயத்திலிருக்கிறேனென உணர் !
எப்படியான போதும் !
இருக்கிறேன் நான். !
-------------------------- !
இதழால் இதழ் பற்றி !
வாழ்வியல் சுகத்தினை !
நீ !
கற்றுக்கொடுப்பாயெனில் !
உடனடியாய் !
இறக்கவும் சம்மதமே !
------------------------- !
உனக்கென்ன !
பிடிக்குமென !
அடிக்கடி கேட்கிறாய் !
நீ !
என்பதைத் தவிர !
வேறு என்னவாய் !
இருந்துவிடப்போகிறது !
என் பதில் !
----------------------- !
சாமி தேர் !
எங்கள் வீதிக்குக்கூட !
வந்ததில்லையென்றேன் !
மறுநாளே !
என் வீட்டுக்குள் !
வந்தாய் நீ !
----------------------- !
ஒரு முழம் !
பூ கூட வாங்கிக் !
கொடுத்ததில்லையென !
சண்டை பிடிக்கிறாய் !
பூந்தோட்டத்தை !
ஒரு முழத்திலெப்படி !
ஈடு செய்ய முடியும் !
--- பாலபாரதி

கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம்

சத்தி சக்திதாசன்
அகிலத்தின் படைப்பில்!
அவனொரு வினோதம்!
அலைந்தாடும் அவன்!
கலைந்தோடும் நெஞ்சம்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
நிகழ்வுகளின் நிழலில்!
நின்றாடும் வாழ்க்கை!
நித்தியத்து வாழ்வினிலே!
நச்சரிக்கும் நிஜங்கள்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
நடந்தவைகளின் எச்சங்கள்!
கடந்தவைகளின் மிச்சங்கள்!
நடப்பவைகளின் இனிமைகள்!
கடப்பவைகளின் மென்மைகள்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
சிந்தனைகளில் சிதறுபவை!
சிதறியவைகளில் தித்திப்பவை!
சிக்கலின் முடிச்சுக்கள்!
சிக்காத முடிவுரைகள்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
அவன் இருப்பும் வாழ்க்கையே!
அதன் நிகழ்வும் நடப்புக்களே!
அறிந்தோர்கள் அடைந்தோர்கள்!
அறியாதர் இழந்தோர்கள்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
-சத்தி சக்திதாசன்

எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை

வெண்ணிலா
சாப்பிடும் சோறு !
பேசும் பேச்சு !
சிரிக்கும் சிரிப்பு !
எல்லாம் குழந்தைக்காக என !
கரு சுமந்து.. !
நாளை !
உன்னோட வண்டியில் !
முன்நின்று சிரித்து வர !
உன் இனிசியல் போட்டுக்கொள்ள !
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன் !
நான்கைந்து மணிநேரம் !
ரத்த வெள்ளத்தில் மிதந்து !
கேட்டால் கிடைக்குந்தான் !
உன் முத்தம் !
உன் அரவணைப்பு !
உன் ஆறதல் !
பச்சப்புள்ள கேட்டா !
பாலூட்டுகிறோம் !
கரு சுமந்து !
குழந்தைத் தவமிருக்கும் பெண்களை !
சுமக்க !
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை

சபதம்

சுல்பிகா
சருகுகள் ஓதுங்கிகிடக்கும் !
சகதிக்குள் தடையின்றி ஓடுகின்றது நீர் !
சாக்கடையின் சகதிக்குள் !
சிக்குண்டிருந்தது உனது சடலம் !
நேற்றுக் காலை நீ கணவனுடன் !
கரையில் உலவியதாய் !
காற்றுடன் கலந்து செய்திகள் வந்தன !
உடல் சுற்றிய ஒரு துணித்துண்டேனும் !
உன் மீதில்லை !
மனித தர்மங்களும் தார்மீக மதங்களும் !
தரிப்பிடம் தேடி அலைந்து திரிந்தன. !
தேசியத்தின் பேரால் ஒரு யோனி !
பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று !
பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று !
சுயநலத்தின் சூறையில் பிறிதொன்று !
எத்தனை யோனிகள் எத்தனை உடல்கள் !
இன்னும் அழிய உள்ளன !
தோற்று விட்டதா மனித தர்மங்கள் !
மனித உயர் விழுமியங்கள் !
உயிர்த்தெழும் வரை !
எமது யோனிகள் !
எமது உடல்கள் மற்றொரு காமுகனைப் !
பெற்றுப் போடாதிருக்கட்டும். !
-- சுல்பிகா !
உரத்துப் பேசும் உள்மனம் கவிதைத்தொகுதியிலிருந்து

தனிமை பிடித்திருக்கிறது

ரசிகன்!, பாண்டிச்சேரி
தேனூறும் சிறுப்பூவில்!
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல!
யாருமில்லா தனிமையிலும்!
வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது!
ஒரு நினைவும் ஒரு நிழலும்!!
முகம் கொடுத்து பேச இயலாது!
எல்லோரும் முகம் சுழிக்க!
என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை!!
சூழ்நிலை இசையிலும்!
நினைவுகளின் அலைவரிசையில்!
லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது!!
இறுகிப்போன இதயத்தின் மத்தியில்!
செல்லரித்துப்போன நிஜங்கள்!
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!!
மீண்டெழும் சாத்தியக்கூறுகள்!
மறுக்கப்பட்ட உண்மைகளாய்....!
தனிமை பிடித்திருக்கிறது-!
எனக்கு நானே செய்துகொண்ட!
மானசீக ஒப்பந்தம்

யாழ் வென்ற ராவணநாடு

சுதர்மன்
வை.சுதர்மன் - சிங்கப்பூர்!
தமிழே தமிழ்ச் செல்வமே!
உன்னை இழந்த தமிழுலகம்!
உன்வீர வரலாற்றிற்கு தலைவணங்குகிறது!
நீ அழியவில்லை அடமானம் போகவில்லை!
நீதிக்கும் நேர்மைக்கும் கொடிஏந்தினாய்!
எட்டுமுலக தமிழர் உள்ளங்கள்!
தோறும் வாழ்கிறாய் வளர்கிறாய்!
உன்நாடு உனதுஇனம் உன்தாயின் மொழி!
வாழ்விற்கும் வளத்திற்கும் உந்துஉணர்வாய்!
கயல்வழியாய் நிழல் தந்து நிற்கிறாய்!
எம் தமிழினமும் ஒரு நாள் பேரினமாகும்!
உனக்கும் கோயில் கட்டி கும்பிடும்!
உன்னைக் கொன்ற வானரக்கூட்டம்!
அன்று! உன்முன் தலைதாழ்ந்து நிற்கும்!!
தமிழினமே ஒன்று படு உயர்ந்து நில்?!
தமிழுக்கும் தமிழினத்திற்கும் அழிவில்லை!
புயலும் நீயே! எழிலும் நீயே! !
முதலும் நீயே! முற்றும் நீயே!!
வை.சுதர்மன் - சிங்கப்பூர்

என் பசி

கவிதா மகாஜன்
என் பசி!
-> மராத்திய மொழிக்கவிதை> தமிழாக்கம் : புதியமாதவி!
ஒத்துக்கொள்கிறேன்!
நான் உன் அடிமை என்பதை.!
உணர்ந்து கொண்டேன்!
இழந்துப்போன!
என் உரிமைகளை.!
நானே வலிய வந்து!
ஏற்றுக்கொண்டு விட்டேன்!
-என் சுதந்திரம்!
பறிக்கப்பட்டதை-!
என்னைக் கட்டிப்போட்டிருக்கும்!
சங்கிலியின் மறுமுனை!
உன் வசம்.!
நீ ஆட்டுகிறாய்!
என்னை ஆட்டுவிக்கிறாய்!
காட்சிப்படுத்துகிறாய்.!
என்னைக் !
காட்சிப்பொருளாக்கும்!
கண்காட்சிகளை!
என் சம்மதத்துடனேயே!
அரங்கேற்றுகிறாய்.!
என்னை விடுவிக்க!
என் மீது கொண்ட!
அபரிதமான உன் காதலால்கூட !
என் கட்டுகளை அவிழ்க்கும்!
நாட்களைப் பற்றி!
பேசாதே.!
உன் வாசலுக்கு வெளியே!
என்னைக் கட்டிப்போடும்!
காலச்சங்கிலிகள்!
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்!
காத்திருக்கும்!
சிவந்த சவுக்கள்!
!
கெட்டுப்போன!
எச்சில் பருக்கையை!
என் தட்டில் பரிமாற!
காத்திருக்கும்!
ராட்சதக்கைகள்!
என்ன செய்யட்டும்!
இருந்துவிட்டுப் போகிறேன்!
உனக்கு!
உனக்கு மட்டுமேயான !
அடிமையாக.!
களைத்துப் போய்விட்டேன்.!
கண்டவர்கள்!
கால்களை எல்லாம்!
நக்கி நக்கி!
வறண்டு போய்விட்டது!
என் நாக்குகள்.!
அதில் பிறக்கும்!
என் வார்த்தைகள்!
வலிமை குன்றிவிட்டன!
எழுந்து நிற்க முடியாமல்!
சரிந்து விழுகின்றன.!
பற்களுடன் உரசியப்பின்னும்!
என் நாக்குகளுக்கு!
கிடைக்கவில்லை!
வார்த்தைகளின்!
ஒலிச்சுவடு.!
என் உதடுகளைப் !
பற்றிக்கொள்ள துடிக்கும்!
வார்த்தைகள்!
எல்லா இடங்களிலும்!
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.!
எதுவும் மிச்சமில்லை!
என்வசம் இப்போது.!
கண்களில் !
தென்படும் கடைசி !
எதிர்பார்ப்பைத்தவிர:!
உன் தட்டில்!
எஞ்சி இருக்கும்!
கடைசிப் பருக்கையை!
தருவாயா!
என் பசித்தீர்க்க?!
-- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan) கவிதை நூல் தத்புருஷ் ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின் தமிழாக்கம்.)