எனக்கும் அவளுக்கும் திருமணமாயிற்று!
அதுவரைவந்ந என் சொந்தங்கள் குறைந்தனர்!
அவளது சொந்தங்கள் இனிப்போடும் பூவோடும்!
புத்துறவு பூக்க செய்தனர்!
மச்சானைப் போல் உண்டா!
மாமானைப் போல் உண்டா!
மருமகனைப் போல் உண்டா!
புகழாரம் சூட்டினார்!
மயக்கமில்லாவிட்டாலும் மனைவிக்காக!
உதவிகரம் நீட்டினேன்!
ஓட்டி கொண்ட ஓன்னு விட்ட மச்சான்!
மனைவியின் நச்சரிப்பால் வேலை வாங்கிதந்தேன்!
மாதம் சில கடந்தன!
தெற்கத்தி ஊருக்கு செல்லும்!
அங்கிருந்தும் சென்னை வரும்!
பேரூந்துகள் மோட்டலில் சந்திப்பது போல்!
நாங்கள் எப்போதாவது வீட்டில் சந்திக்க நேர்வது உண்டு!
குறுஞ்செய்தியில் குடும்பம் நடத்தமுடியுமா!
எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால்!
போஜனுமில்லை!
போகமுமில்லை!
மனைவியும் தேவையில்லை!
தோன்றிற்று!
புரிந்துணர்ந்து திருமணவிலக்கு பெற்றோம்!
மீண்டும் தனியாளாய் அனுபவத்துடன்!
துண்டித்து கொண்டன முன்னாளின் உறவுகள்!
எனது சொந்தங்களுக்கு மீண்ட சொத்தானேன்!
யாரை பார்ககவே கூடாது என நினைக்கிறோமோ!
அவர் மின்தூக்கி கதவு திறக்க உள்ளிருந்து!
வெளிவர!
அமீனாவிடம் மாட்டி ய கடன்காரனானேன்!
மச்சான்…… சாராகி!
நியாயம் உங்க பக்கம்தான்!
ஆனாலும் நியாயமாய் நான் தங்கச்சி பக்கம் தான்!
இருக்கவேண்டியிருக்குயென!
தலைகவிழ்ந்து சென்ற முன்னாலின் தம்பி
வி. பிச்சுமணி