சாதுர்யை 2 - வெளிவாசல்பாலன்

Photo by Seyi Ariyo on Unsplash

போனதடி ஒரு பகல் பொல்லாத நாளாய்!
உன்னிடமிருந்து திரும்பி வருகையில் !
கடல் கொந்தளித்துக் காற்றில் மோதியது!
முறிந்த மலர்களிலிருந்த !
சிதறிய மலர்கள்!
நமது பகலின் அடையாளம்!
சூரியன் வானத்திலிருந்ததா !
கீழே வீழ்ந்து சிதறியதா!
எதுவும் தெரியவில்லை!
வீதியில் நீ பறித்த குழிகள் ஆயிரம் ஆயிரம்!
அது விடை பெறாத தருணம்!
நீ என்னைத் தோற்கடித்த தருணம்!
நானும் நீயும் பகைவர்களல்லவே !
ஆனால் நீ என்னைத் தோற்கடித்தாய்!
மனங்கொத்தியே மனங்கொத்தியே!
தோழமை என்பது என்ன!
நட்பாயிருத்தலின் அர்த்தம்தானென்ன!
இன்றறிந்தேன் ஒன்றை!
தடைகளைக் கடக்க முடியாமற் தானுள்ளாய் நீயும்!
இன்னும்!
இன்னும்!
அழகிகள் வீரிகளாவதெப்போது!
வீரிகளே அழகிகள் என்ற என்னுலகத்தில்!
-- வெளிவாசல்பாலன்
வெளிவாசல்பாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.