வயலில் இருக்கும் புற்கள் களைந்தால்!
இயல்பாய் விளைச்சல் அள்ளிக் கொள்ளலாம்.!
செயலில் கேடு நினைக்கும் சிந்தையை!
செழிக்க விடாது தடுத்தாட்கொண்டால்!
கொழிக்கும் நன்மை உலகில் ஏராளம்.!
அழியாது அறிவை வளமாக்க முயன்றால்!
துளிர்க்கும் மகிழ்வால் கூடி ஆடலாம்.!
வாழ்வு, கவிதை, காதல், பாடலாய்!
வாழ்ந்து பார்க்கலாம் நல் மனிதனாகலாம்.!
வாழ்த்துப் பாடுமுலகம், வாழ்ந்து பார்
வேதா. இலங்காதிலகம்