முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள் - துவாரகன்

Photo by engin akyurt on Unsplash

நாங்கள் பொதி சுமக்கும் ஒட்டகங்கள்!
முதுகு முறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்!
மூச்சிரைக்க இழுத்துச் செல்லும் !
வண்டில் மாடுகள் போல்!
நாங்கள் !
முதுகுமுறிய பாரம் சுமக்க தயாராய் இருக்கிறோம்.!
சாட்டையும் விரட்டும் இலாவகமும்!
உங்களிடம் இருக்கும் வரை !
நாமும் சுமந்துகொண்டே இருப்போம்.!
செல்லும் தூரமோ,!
பொதிகளின் அளவோ !
எதைப் பற்றியும் நீங்கள் !
கணக்கிடத் தேவையில்லை.!
ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள்தானே.!
ஓய்வு கிடைக்கும்போது அசைபோடவும்!
நீர் கண்டபோது நிரப்பவும்!
பாலைவனம் கடப்பதற்கு உம்மைச் சுமக்கவும்!
நாங்கள் ஒட்டகங்கள் தயாராய் இருக்கிறோம்.!
இன்னமும் வானம் பார்க்கும் கூரையும்!
சில்லறை பொறுக்கும் கரங்களும் !
கூடவே எங்களுடன்தான்.!
என்றாலும் நீங்களும் நாங்களும் !
சாப்பிடுவது ஒரு சாண் வயிற்றுக்குத்தானே.!
-துவாரகன்!
04092007
துவாரகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.