01.!
உதிரத்தின் வாடை!
-----------------------!
உறைந்து கிடக்கும் உதிரத்தின் வாடைகளுக்கிடையில்..!
ஒப்பாரி ஓலங்கள் பதிய வைத்துச்!
சென்ற நினைவுச் சிதறல்கள்!
பரந்த வெளியில் மௌனித்து!
உறங்கும் தருணமிது!
எங்கெங்கு தேடினாலும்!
தமிழனின் வாடை!
நிசப்தமாய்...!
ரீங்காரமாய்...!
நடுக்கமாய்...!
ஒய்யாரமாய்..!
அழுகையாய்...!
உறைந்து கிடக்கும் பனியாய்...!
இப்படி மண்ணெங்கும் பல தோரணையில்...!
துர்நாற்றம் வீசும்!
பெண்ணின் கற்பப்பைகள்!
உடலுக்குள் ஏற்றப்பட்ட சுமை!
உடைபட்டு வெளியேறும் தருணம்!
உதிரத்தின் வாடை!
பகிர்ந்தளிக்கப்படா கொந்தளிப்பாய்!
உருமாறி உயிர் கொல்லும்!
மௌன நிலையில்!
நுகர்ந்து கொள்ளப்பட்டு!
மீண்டும்...!
உதிரத்தின் வாடை!
விஸ்வரூபமாகி வெடிக்கத் தயாராகிறது!
விதையாகித் துளிர்க்க....!
!
02.!
ஒரு பயணம் ...!
------------------------!
உடல் உணவைத் திண்கிறது!
மனம் எண்ணங்களைத் திண்கிறது!
மௌனம் சொற்களைத் திண்கிறது!
விழிகள் அன்பைத் திண்கிறது!
சுவாசம் உயிர்பைத் திண்கிறது!
எத்தனையோ முறை எத்தனையோவற்றை!
விழுங்கி தான் வாழ்க்கை!
பிரதிபலிக்கிறது...!
கடத்து வந்த காலப் பயணங்கள்!
சொல்லிச் சென்ற அனுபவங்களால்!
செதுக்கப்படும் சிற்பமாய் வாழ்க்கை!!
எத்தனையொ தருணங்கள்!
துரத்தியடிக்கப்படுகின்றன!!
அறிவின் செம்மை சூழ்நிலைக்குள்!
சிக்கிக் கொண்டு எதிர்திசையில்!
போராடுகிறது...!
துர்நாற்றம் வீசும் பொழுது!
மூக்கின் துவாரங்கள் துடைக்கப்படுகின்றன!
நாற்றத்துடன் மனம் பேசிய!
ரகசியத்தால்..!
விடைகொடுக்கப்படாத பயணங்கள்!
தொடர்ந்து கொண்டு தானிருக்கும்!!
எதை எதையோ தின்று தான்!
பயணம் தொடர்ந்து கொண்டுறிருக்கிறது!
நித்தமும் யோசிக்கும் பொழுது!
செயலூக்கம் பெறும் நினைவுகள்
துர்கா