அவமானங்கள் அறுத்தெறியப்பட்டு!
அங்கங்கள் பிரசுரிக்கப்பட்டுவிட்டன!
வெட்டவெளியில் நீதிதேவதை!
மடிந்து கிடக்கிறாள்!
அப்பட்டமாக்கப்பட்ட பின்பு!
ஏனோ?!
மௌனமான மனம்....!
வடிந்தொழுகும் குருதியின்!
வாடை பகிர்ந்து கொண்ட!
பின்பு மறைவிடத்தை எங்கு போய்!
தேடுவது......?
துர்கா