நிகழ்தொன்மம் - ரவி (சுவிஸ்)

Photo by Maria Lupan on Unsplash

காய்ந்து உலர்ந்து வரண்டு !
இந்தக் காகிதத் துண்டு இப்போதும் !
பச்சைப் புல்லிடை கிடக்கிறது. !
இல்லை வாழ்கிறது. !
ஒவ்வொரு முறையும். அது !
கண்ணில் எத்துப்படத் தவறுவதேயில்லை. !
காய்ந்து உலர்ந்து வரண்டு !
இந்தக் காகிதத் துண்டு வாழ்கிறது. !
முகில்களில் குரங்கேறி குதறி !
பனிப்பஞ்சை உதிர்த்துக் !
கொட்டிய பிரளயத்தில் இந்தக் காகிதத் துண்டும் !
அலங்கோலமானது, மூடுண்டது. !
திரள்திரளாய்க் கொட்டி !
பனிமண்டலக் கோளாய் இந்த மண்ணை !
மாற்றிய பனிக்காலம் உருவழிந்தது தற்காலிகமாய். !
மரங்கள் இலைசூடிக்கொள்ள முயற்சித்த !
மீள்பொழுதில் மீண்டும் பிழைத்திருந்தது !
காகிதத் துண்டு, பச்சைப் புல்லிடை. !
பழுத்துப்போய் !
தீயின் நா நக்கிய துண்டமாய் !
ஒவ்வொரு பிரளயத்தின் பின்னும் மீண்டும் மீண்டுமாய் !
காய்ந்து உலர்ந்து வரண்டு !
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது, ஒரு தொன்மம்போல.!
குண்டுகளோடு வெடித்துச் சிதறுவதும் !
படுகொலைகளின் மொழிகளும் !
செய்திகளாய் !
நிகழ்காலத்திலேயே தொன்மங்களாய் மாறுகிறது. !
அவ்வளவு வேகம் துரிதம் வீச்சு போர்களுக்கு. !
காய்ந்து உலர்ந்து வரண்டு !
இந்தக் காகிதத் துண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது. !
தாய்மார்கள் கண்ணீரால் சவப்பெட்டிகளை !
கழுவிக்கொண்டிருக்கிற காட்சிகளை !
கொலைநயமாய் நிறநிறமாய் !
வழுவழுப்பான தாள்கள் நிறைத்தபடிதான் !
நீள்கிறது...போ! !
- ரவி (09042006)
ரவி (சுவிஸ்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.