வழியனுப்புதல் - றஹீமா-கல்முனை

Photo by Jorge Zapata on Unsplash

அட்மிஷன்வந்தாச்சா??!
என்பதிலிருந்து துவங்கும்!
பரீட்சை பற்றிய!
வாப்பாவின்!
விசாரணை.....!!!!
தொலைக்காட்சியிலும்!
பத்திரிகையிலுமாய்.....!
வீணே!
உழன்று திரிகையில்....!
எதையாச்சும் படியேன்!!!
என்கிற!
கண்டிப்புகளில்!
ஆயிரம் ஆயிரம்!
அக்கறையிருக்கும்!!!
பேனா,பென்சில்!
ஆளடையாள அட்டை!
அட்மிசன்!
வரைக்குமாய்!
அத்தனையும் எடுக்கச்சொல்லி!
எந்நேரமும் எச்சரித்து....!
சிலநேரம் எரிச்சல் ஊட்டி...!
நேரத்தோடு தூங்கி!
நேரத்துக்கு எழச்சொல்லி!
பரீட்சைக்கு முதல் நாளே!
கண்டிப்பாய் உத்தரவிட்டு!
எதற்கும்!
ஒன்றுக்கு இரண்டு!
பேனாவை எடுத்துவை -என!
எச்சரித்தபிறகும்!
பரீட்சைக்கான!
அவசரத்துக்கு நடுவில்!
காலையில் எழுந்துதான்!
எழுந்துதான்!
பேனா வேணும் என்பேன்!!!!
கடிந்து....!
அவசரமாய்!
கடைக்கு விரைந்து....!
பேனா வாங்கி!
எழுதிப்பார்த்து....!
இடைவெளியில்!
கொண்டு சேர்த்து...!
வழியனுப்பிவிட.....!
இன்றைக்கு வாப்பா.........!
இல்லை!!!!!!!
உங்கள்!
வழியனுப்புதல் இல்லாத!
எனது முதல் பரீட்சை!!
எனக்கான!
எல்லாபரீட்சைகளும்!
இனி இப்படியேதான்!
தொடரப்போகிறது!
வாப்பா!!!!!
பல்கலைக்கழக!
இறுதிப்பரீட்சைக்கு!
வழியனுப்ப...!
இறுதியாய் பஸ் ஹோல்ட் வரை!
வந்தது..!
இப்போதும்!
நினைவில் உண்டு...!!!!
வேடிக்கையை பாருங்கள்!
பட்டதாரியானபிறகும்!
வேலைகொடுக்க பரீட்சை!
வைக்கிறார்கள்!
இப்போது இருந்திருந்தால்!
வேடிக்கையாய்!
சிரித்திரிப்பீர்கள்.....!
எல்லாம் எடுத்த பிறகும்!
பாதி திருப்தியோடுதான்!
பரீட்சை தொடரும்!
உங்கள் வார்த்தைகள்!
மோதுண்டு விழுகின்றன......!
சிரமங்களுக்கு நடுவில்!
படிக்கவைத்து!
பரீட்சைக்கும் வழியனுப்பிவிட்டு!
பெறுபேறுகள் வர முன்னமே!
வாழ்க்கை முடிந்துபோய்....!
எனது பெறுபேறு.....!
எனது பட்டமளிப்பு விழா..!
எனது வேலை....!
எனது வாழ்கை...!
என!
பின்னரான!
எந்த சந்தோசங்களையும்!
பகிர்ந்து கொள்ளாமல்...!
ஊர் உலகில்..!
நம்மைப்போல்!
எத்தனை!
வாப்பாவும் மகள்களுமோ
றஹீமா-கல்முனை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.