என்ன‌வ‌ள்.. த‌ன்னைத்தானே.. பருந்து - ராம்ப்ரசாத், சென்னை

Photo by Paul Esch-Laurent on Unsplash

என்ன‌வ‌ள் ஒரு தேவ‌தை..த‌ன்னைத்தானே விர‌ட்டி.. !
பருந்து வாழ்க்கை!
01.!
என்ன‌வ‌ள் ஒரு தேவ‌தை !
--------------------------------!
பயணம் முடிந்ததும்!
நீ வீசிவிட்டுப்போன‌!
உன் பயணச்சீட்டு!
முன்பதிவு செய்தது!
என் வாழ்க்கைப்பயணத்தை... !
ஜாதகத்தில் நம்பிக்கை!
இல்லையா உனக்கு?!
உள்ளங்கை!
ரேகைகளை மருதாணியிட்டு!
மறைக்கிறாய்?...!
இதழ் ரேகைகளை!
உதட்டுச்சாயம் பூசி!
மறைக்கிறாய்?...!
உன்னைப்பார்க்கும்!
நேரம் என் இதயம்!
துடித்ததா?!
நினைவில்லை...!
இதயத்திலிருக்கும் நீ!
எப்படி நேரிலே தெரிகிறாய்!
என்ற யோசனையில்!
நிற்கையில் என்னிடம்!
நானே இல்லை...!
புவி ஈர்ப்புவிசை விதிக‌ள்!
பொய்த்துப் போவ‌து!
என் இத‌ய‌த்தில்தான்...!
அது விழுந்தால்!
உன்னிட‌ம் ம‌ட்டுமே!
விழுகிற‌து... !
நேர‌ம் போனால்!
வ‌ராது என்பார்க‌ள்...!
நீ வ‌ந்துவிட்டால்!
நேர‌ம் போவ‌தே!
தெரிவ‌தில்லை...!
நீ வ‌ரும்வ‌ரை!
நேர‌த்தைப்ப‌ற்றி!
என‌க்கு அக்க‌ரையில்லை...!
ஆகையால்!
அது போனால் என்ன‌?!
வ‌ந்தால் என்ன‌? !
!
02.!
த‌ன்னைத்தானே விர‌ட்டி.. !
----------------------------------!
மண்ணை ஆராய்ந்து!
பொன்னை விளைவிக்கும்!
வித்தை கற்ற!
பாடங்களை மறந்து!
வெறும் காகிதச்செடிகளை!
க‌ணிப்பொறிக‌ளில்!
நட்டு வைப்பதே!
புதுமை என்றாகிவிட்ட பிறகு!
காகித வண்ணங்களில் வேறுபாட்டையும்!
எண்ணங்களில் குறைபாட்டையும்!
தவிர்க்கமுடியவில்லை... !
முன்னேற்ற படிகள்தான்!
என்று குதூகலிக்கின்றனர்!
ஏறுவது குழிக்குள்தான்!
என்பதை அறியாமல்... !
விரைவாக விரையும்!
இரு ரயில்களில்!
முந்திச் செல்வது!
எது என்கிற முனைப்பில்!
கவனிப்பின்றி கடந்து போகும்!
சின்ன சின்ன சந்தோஷங்களைக்கூட‌!
நாளைக்கென்று ஒத்திப்போடுகின்றனர்!
இன்றைய பொழுது சேமிக்கவாம்... !
வெட்டியாய் பொழுதைக்!
கழிக்க வேண்டாமென்று!
வீட்டுக்கடன் வட்டிக்காய்!
கழிகிறது பொழுதுகள்... !
பத்துவருடங்கள் கழித்து!
கிடைக்கும் ப‌த்து ல‌க‌ர‌!
நிக‌ர‌ லாப‌மென்று பத்தாயிரம்!
க‌ண‌க்குக‌ள் போட்டு!
ப‌தினூரு கையோப்ப‌மிட்டு!
மிக‌க்க‌வ‌ன‌மாய் ஒரு ப‌ந்த‌ம்!
வாழ்நாள் நிர்ப‌ந்த‌மாய்...!
நில்லாம‌ல் ஓடும் ஓட்ட‌த்தில்!
த‌ன்னைத்தானே விர‌ட்டி!
ஓடும் விந்தை ம‌னித‌ர்க‌ள்!
இவ‌ர்க‌ள்... !
!
03.!
பருந்து வாழ்க்கை !
----------------------!
இட்ட முட்டைகளை!
மரப்பொந்தில்விட்டு!
இரை தேடி!
உயர பறக்குமாம் பருந்து...!
இத்தனை உயரம்!
பறப்பவன் தானொருவனே!
என் இறுமாந்து!
கொள்ளுமாம் தன்னை மறந்து...!
அப்போது,!
மரப்பொந்து முட்டைகளைப்!
பாம்பொன்று வந்து!
கவ்வி செல்லுமாம் அதுவே,!
அதன் பசிப்பிணிக்கு மருந்து...!
அப்படித்தான் கவ்வப்பட்டு!
காணாமல் போகிறது !
பணம் சமைப்போரின்!
சொந்த வாழ்க்கையும்
ராம்ப்ரசாத், சென்னை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.