வெறுமை மனதை வியாபித்து நிற்க!
நிம்மதி நாடி அமைதியைத் தேடி!
நடந்தேன் இலக்கின்றி வருத்தமாய்!
அழுத்தும் சுமையை எங்கிருந்து எடுப்பது!
எவரிடம் எப்படி இறக்குவது!
தெரியாமல் திணறியது மனது குழப்பமாய்!
பாதையோரம் காண நேர்ந்த!
பார்வையிழந்த இளைஞன்!
கம்பீரமாய் நம்பிக்கையாய்!
நிமிர்ந்து நடக்க உதவியாய்!
கூடச் சென்ற கைத்தடி..!
கேட்காமல் கேட்டது என்னை!
இல்லாத ஒன்று எப்படியாகும் பாரமாய்!
புரியாதது புரிந்திட திகைத்து நின்றேன்!
எடுத்துக் குறைத்திட ஏதுமற்றவனாய்!
இதுவரை கிடைத்த நல்லன யாவும்!
நினைவுக்குவர நன்றி மிகுதியில்!
நெஞ்சம் நனைந்தவனாய்!
வெறுமையென மயங்கிய மனதுக்கு!
வலிமைதர என்றைக்கும்!
பெற்ற அனுபவங்கள் துணையிருக்கும்!
என்பதனை மறந்தயென்!
மடமையை எண்ணி வெட்கிச் சிரித்தவனாய்.!

ராமலக்ஷ்மி