01.!
சோதனைச்சாவடி!
-----------------------------!
பொறுமையை சோதிக்காதீர்கள்!
உங்கள் பக்கம்!
உண்மை இருந்தால்!
மௌனமாக இருந்துவிடுங்கள்!
பேதம் பார்க்காதீர்கள்!
இறந்த பின்பு பிணம் தான்!
என்பதை ஞாபகம்!
வைத்துக் கொள்ளுங்கள்!
நெருக்கடிக்கு உள்ளாகாதீர்கள்!
எய்யப்பட்ட அம்புகளும்!
சொல்லப்பட்ட வார்த்தைகளும்!
எதிராளியை!
காயப்படுத்தாமல் விடாது!
ஒத்தி வைக்காதீர்கள்!
உங்களுக்கான வாய்ப்பை!
இழந்து நிற்காதீர்கள்!
சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்!
வாய்ப்பு இன்னொருமுறை!
உங்கள் கதவைத தட்டாது!
போதையில் மிதக்காதீர்கள்!
பிறர் மனையை!
கவர்ந்து இழுக்காதீர்கள்!
பாதையை வகுக்காதீர்கள்!
கடலில் விழும் மழைத்துளிக்கு!
முகவரி உண்டா கேளுங்கள்!
யோசனை செய்யாதீர்கள்!
காகிதங்கள் குப்பையாகலாம்!
அதற்காக வருத்தப்படாதீர்கள்!
உலகமே சோதனைச் சாலைதான்!
நாமெல்லாம் பரிசோதனை!
எலிகள் தான் என்பதை!
நினைவில் கொள்ளுங்கள்!
ஆண்மை தவறாதீர்கள்!
வாய்ப்பு கிடைத்தால்!
ஒழுக்கம் தவறும்!
நீச புத்திக்காரர்கள்!
நிறைய பேர் இருக்கிறார்கள்!
பாருங்கள்!
கதவைத் தட்டாதீர்கள்!
உள்ளே பிரார்த்தனை!
ஏறெடுத்துக் கொண்டிருப்பதை!
காது கொடுத்துக் கேளுங்கள்!
பாவம் செய்து தொலைக்காதீர்கள்!
இந்தச் சிறைச்சாலைக்குள்!
மீண்டும் சிக்கித் தவிக்காதீர்கள்.!
!
02.!
இலக்கு!
---------------!
மரணமே இன்று வராதே!
முடிக்கப்பட வேண்டிய வேலைகள்!
நிறைய இருக்கின்றன!
சம்பளத் தேதியில் இறக்க!
யாராவது சம்மதிப்பார்களா!
கட்டப்பட்ட வீட்டில் குடிபுக!
ஆசையிருக்காதா!
தவழும் குழந்தை!
தத்தி நடப்பதை காணாமல்!
போய்விடத் தோன்றுமா!
மனிதனின் சராசரி வயதின்!
பாதியைக் கூட இன்னும் கடக்கவில்லை!
நரைமுடி கூட ஆங்காங்கே!
இன்னும் தோன்றவில்லை!
உறுப்புக்கள் எதுவும் செயலிழக்கவில்லை!
பார்வைத்திறனும் குறையவில்லை!
அன்பிற்கினியவர்கள் ஒவ்வொருவராய்!
காலனின் அம்பு பாய்ந்து!
வீழ்ந்த போது!
தெரிந்து கொண்டேன்!
எனக்குத் தான்!
குறி வைக்கிறார்களென்று.!
!
03.!
கையூட்டு!
-----------------------!
அரசு அலுவலகங்களில்!
கோப்புகள் இடம் மாறுவதற்குள்!
குதிரைக்கு கொம்பு முளைத்துவிடும்!
ஒரு ரப்பர் ஸ்டாம்புக்காக!
குடிமகனின் பாக்கெட்டில் உள்ளதை!
மொத்தமாக கறந்து கொண்டு!
தான் விடுவார்கள்!
உடைகளெல்லாம் பைகளாக!
இல்லாவிடில்!
குடிமக்கள் கொண்டுவந்து!
கொட்டுவதை!
அள்ளிப்போக முடியாது!
அரசு கருவூலம் கொடுக்கும்!
சம்பளம் போதாதென்று!
பொது மக்களின் வயிற்றெரிச்சலை!
கொட்டிக் கொள்வார்கள்!
தரகரின்றி நேரில்!
அணுக முடியாத!
அரசு அதிகாரிகளும்!
இருக்கத்தான் செய்கிறார்கள்!
லஞ்சம் கொடுத்து அரசு பணிக்கு!
வரும் போது கைகள் பரபரக்கும்

ப.மதியழகன்