இருப்பு - நளாயினி

Photo by FLY:D on Unsplash

பூக்கள் என்றான் !
அலங்கரிக்க முடிந்தது. !
மலர்கள் என்றான் !
இறைவனை அர்ச்சிக்க முடிந்தது !
பூவையர் என்றான் !
மலர்களை சூட முடிந்தது. !
மயில் என்றான் !
தோகை விரித்து ஆடும் தகுதி !
ஆண் மயிலுக்கானாலும் !
மழையை ரசித்து ஆடுவதை !
பார்க்க முடிந்தது. !
குயில் என்றான் !
கூவும் தகுதி ஆண் குயிலுக்கானாலும் !
அந்த இசையை ரசிக்க முடிந்தது. !
பெண்ணாக பிறந்ததனால் !
வெறும் !
ஏற்றுமதிப்பண்டமாகி !
வரவேற்பறையை அலங்கரிக்கும் !
காகிதப்பூக்களாக !
கண்களற்ற மயில்களாக !
காதற்ற குயில்களாக !
பூச்சாடியுள் !
வளர்க்கப்படும் செடிகளாக !
ஓ ! எம் வேர்கள் கிளைகள் கூட !
அப்பப்போ வெட்டப்படும். !
மண் தனதியல்பிழக்க !
புதிதாய் மாற்றப்படும். !
அப்போ கூட !
பல வேர்கள் அறுக்கப்படும். !
பன்னிரண்டு சென்ரிமீற்றர் !
இருபத்து நான்கு சென்ரிமீற்றர் என !
மாறுபட்ட சாடிகளில் வளர்க்கப்படுகிறோம். !
எம் வேர்கள் அதற்குள் உள்ள !
வளங்களை மட்டுமே உறிஞ்சி. !
சூரிய ஒளி இல்லைத்தான் !
ஆனாலும் கண்ணாடிகளுக் கூடாக !
வரும் சொற்ப ஒளி கொண்டு !
பச்சயத்தை தயாரித்து !
வாழத்தான் துடிக்கிறோம். !
ஆனாலும் பல பூச்சாடி மரங்கள் !
நீர் இன்றி மண்மாற்ற ஆள் இன்றி !
பச்சையம் தயாரிக்க வலுவின்றி !
பட்டுத்தான் போகின்றன. !
எங்கோ இரண்டொரு செடிகள் !
மட்டுமே உயர்ந்து வழர்வதற்காய் !
பனியிலும் !
வெய்யிலிலும் !
பூத்து காய்த்து !
கனிந்து !
இலையுதிர்த்து !
அத்தனை கால மாற்றத்திற்கும் !
ஈடு கொடுத்து !
தனதிருப்பை இழக்காது !
வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. !
-- நளாயினி தாமரைச்செல்வன் !
9-12-2002
நளாயினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.