அழுது கொண்டிருக்கிறாள்!
அவள்!
எதற்கு!
ஏன்!
எப்படி!
என்றில்லாமல்!
அழுது கொண்டிருக்கிறாள்!
அவள்!
இழந்து விட்ட!
அல்லது!
பெறத்தவறிய!
ஏதோ ஒன்றுக்காக!
மனசாலோ!
கண்களாலோ!
அழுது கொண்டிருக்கிறாள்!
அவள்!
எப்படியும்!
அவள்!
அழுதாக வேண்டும்!
என்பது!
எழுதப்படாத விதி!
வலிக்க!
வலிக்க!
அழுது கொண்டிருக்கும்!
அவள் கண்களை!
நோக்கி!
எந்தக்கருணை!
விரல்களும் நீள்வதாயில்லை!
ஆதிக்கமும்!
அடக்குமுறையும்!
அவள்!
புன்னகைகளை!
களவாடி விட்டன!
அவளது!
ஒவ்வொரு!
கண்ணீர்த் துளிக்கும்!
பின்னால்!
உதிர்ந்து கொண்டிருக்கிறது!
வெகுண்டெழும்!
நம்பிக்கையின்!
வரட்டு முகங்கள்!
அவளுக் கென்று!
ஆயிரம்!
திசைகள்!
அத்தனையும்!
ஆண்டாண்டு காலமாய்!
பூட்டப்பட்டுள்ளன!
என்றோ!
ஒரு நாளில்!
அவளுக்கான!
திசைகளின்!
வாசல் கதவுகள்!
உடைத்தெறியப்படலாம்!
அப்படி!
நேர்ந்தபின்!
எதற்கு!
ஏன்!
எப்படி!
என்றில்லாமல்!
அழுது கொண்டிருப்பான்!
அவன்…
நிந்தவூர் ஷிப்லி