மலரவிருக்கும்!
உனைப்பிரிந்த பின்னரான!
நிர்ப்பந்த நாட்கள்!
இருண்டதொரு பாலைவனமாய்!
என் முன்னே விரிந்து கிடக்கிறது!
விடைதொலைத்ததொரு கேள்விக்குறியாய்...!
பிரிவின் பின்னர்!
துயர் கவியும் பாடல்கள்!
என்னைச்சூழலாம்...!
என் கண்கள் வழியே!
இடர்மிகு ரணங்கள்!
துளித்துளியாய் உதிரலாம்...!
பிரக்ஞையற்ற சூனிய வெளியில்!
எனது கால்கள் வேர்பிடிக்கலாம்..!
நீயற்ற நாட்களை நினைக்கையில்!
ஏதுமற்ற ஏகாந்தப்பரப்பில்!
தனியே நான் விம்மியழும் சப்தம்!
எனக்குள் மட்டும் ஒலித்தோய்கிறது..!
பிரிவு குறித்து!
இன்னும் நிறையப்பேசலாம்..!
அதற்கிடையில்!
நீ என்ன சொல்லப்போகிறாய்...???
நிந்தவூர் ஷிப்லி