மண்ணே கேள் - முருகடியான்

Photo by Freja Saurbrey on Unsplash

மண்ணே கேள்!!
-----------------------!
ஆழி யாற்றைக் கட்டிக் கொண்ட!
அழகு மண்ணம்மா! -உன்!
அடிவ யிற்றில் நெருப்புக் குண்டம்!
இருப்ப தென்னம்மா?!
வாழி போற்றி நாங்கள் பாட!
மகிழும் மண்ணம்மா! -கொடு!
வாய்தி றந்து நெருப்பு வாந்தி!
எடுப்ப தென்னம்மா?!
சின்ன கொண்டை பெரிய கொண்டை!
மலைக ளானதோ? -நீ!
சீறும் போது வேர றுக்கும்!
அலைக ளானதோ?!
வண்ணங் கொண்ட குன்ற னைத்தும்!
மார்ப கங்களோ? -அதில்!
வழிந்து சிந்தும் அருவி எல்லாம்!
பாற்சு ரங்களோ?!
மாழை நூறு மடிசு மந்து!
மலர்கள் பூக்கிறாய்! -அதை!
மனிதன் தோண்டி எடுக்கும் போது!
பொறுமை காக்கிறாய்!!
ஏழை நாங்கள் தூங்கும் போது!
எட்டி உதைக்கிறாய்! -உன்!
இனிய மக்கள் உயிரை உடலை!
ஏனோ புதைக்கிறாய்?!
மேனி எங்கும் மயிர்க ளாக!
பயிர்க ளானதோ? -அதை!
மேய்ந்தி ருக்க வாழ்ந்தி ருக்க!
உயிர்க ளானதோ?!
தானி யங்கும் தன்மை அந்தத்!
தலைவன் தந்ததோ? -எங்கள்!
தமிழும் அந்த முறையில் தோன்றி!
நிலைத்து நின்றதோ?!
உனக்குக் கூட நொடித்துப் போகும்!
கால முள்ளதோ? -உன்!
உறவை நம்பும் மனிதப் பயிரை!
அழித்தல் நல்லதோ?!
கணக்கில் லாமல் உயிரைத் தாங்கும்!
காதல் கண்ணம்மா! -எம்!
கால்மி திக்கப் பொறுத்த ருள்க!!
நன்றி மண்ணம்மா!!
-பாத்தென்றல்.முருகடியான்
முருகடியான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.