குளம்படி சப்தங்கள்.. வீதிவழியே.. வெளிச்ச - முனைவென்றி நா சுரேஷ்குமார்

Photo by Jr Korpa on Unsplash

குளம்படி சப்தங்கள்.. வீதிவழியே ஒரு பயணம்.. வெளிச்ச தேவதை!
01.!
குளம்படி சப்தங்கள்!
--------------------------!
ஆளரவம் எதுவுமில்லை!
நள்ளிரவு நிசப்தம்!
கேட்டுக்கொண்டே இருக்கின்றன!
குளம்படி சப்தங்கள்!
காதுகளில்...!
எந்தத் திசைநோக்கியும்!
செல்லலாம்!
அந்தக் குதிரை!
கடிவாளமும் அணிந்திருக்கலாம்!
காற்றாய் பறக்கும்!
அந்தக் குதிரை!
கனமழை பொழிவதற்காய்!
கூடிய மேகங்களை!
கலைத்துவிட்டும் போகலாம்!
அந்தக் குதிரை!
தூக்கத்திலிருந்து பலரை!
தட்டியெழுப்பியிருக்கலாம்!
அதன் கணைப்பொலி!
நிச்சயமாய் ஒருவன்!
அமர்ந்திருப்பான்!
அதன்மேல்...!
என்ன அவரசம்!
அந்தக் குதிரைக்கு?!
கேட்டுக்கொண்டே இருக்கின்றன!
குளம்படி சப்தங்கள்!
காதுகளில்...!
02.!
வீதிவழியே ஒரு பயணம்!
-------------------------------!
வந்து போனதற்கான !
தடயங்கள் ஏதுமின்றி !
அமைதியாய்க் கிடக்கின்றது !
அந்த வீதி!
மணம்வீசி!
அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன !
அந்த மலர்கள் !
துள்ளித் திரிந்த !
மழலைகளும் !
நின்று கவனிக்கின்றன !
விபரமேதும் அறியாமல்...!
கண்கள் கலங்கும் !
வானம் !
வீதிவழி மௌனமாய் !
ஒரு பயணம் !
நெஞ்சமெங்கும் !
பிரிவின் வலி!
நெருப்பை அணைக்க முயன்று !
தோற்றுத்தான் போகின்றன!
அந்தக் கண்ணீர்த் துளிகள் !
03.!
வெளிச்ச தேவதை!
-------------------------!
ஒவ்வொருநாள் உறக்கத்திலும்!
கனவில் நீ !
வந்துவிடுகிறாய் என்றபோதும் !
எந்தக் கனவாலும் !
தந்துவிட முடியாது!
அதிகாலை என்னை தட்டியெழுப்பும் !
தேவதையான உன்னை...!
-----!
நீ குட்டிப்பாப்பாவாய் !
என் அத்தையின் வயிற்றில் !
கருவானபோதே !
உருவாகிவிட்டது !
நமக்கான காதலும்...!
-----!
நான் கண்மூடி உறங்கியபின் !
என் கனவுலகில் !
எப்போதும் இருள்சூழ்ந்ததில்லை. !
அதோ தூரத்தில் தெரிகிறாள் !
என் வெளிச்ச தேவதை !
-----!
படிக்கும்போதும் !
வீட்டுநினைவு வந்ததாய்!
சொன்னாய் நீ.!
அந்த நூலக வாசலில்!
ஆறுதல் சொன்னேன்.!
நீ அன்பாய் பார்த்த!
அந்த நொடியில் !
விதையாய் விழுந்து !
விருச்சமானதடி !
நம் காதல் !
-----!
தோழியென்றே பழகிவந்தாய் !
யாரையாவது காதலிக்கிறாயா?'!
என்றாய்.!
இல்லையே' என்றேன்.!
பொய் சொல்லாதே' என்றாய்.!
நிஜமா இல்லப்பா' என்றேன்.!
அதான் !
என்னைக் காதலிக்கிறாயே...'!
சொல்லிவிட்டு !
ஓரக்கண்களால் முறைத்தவாறே !
எதிர்த்திசை நோக்கி !
மெல்லமெல்ல தவழ்ந்தாய் !
வேற்றுகிரக வாசியாக !
மாறிக்கொண்டிருந்தேன் நான்.!
-----!
என் வீட்டில் தவழ்கிறது!
என் மகளென்ற பெயரில் !
ஒரு பொம்மைக்குட்டி !
உன்னைப் போலவே...!
----!
நம் குழந்தையை !
கொஞ்சும் சாக்கில் !
என் மீசையை பி(க)டித்திழுத்து !
விளையாட ஆரம்பித்தாய்.!
உனக்கு !
இன்னொரு குழந்தையாய் !
மாறிப்போனது !
என் மீசை!
----!
வாழைக்கன்று மாங்கன்று !
மல்லிகைக்கொடி ரோஜாச்செடி !
என எனக்காக !
நீ வளர்த்ததைப் போலவே !
நீ பி(க)டித்திழுத்து விளையாட !
உனக்காக வளர்த்து வைத்திருக்கிறேன் !
என் மீசையை...!
----!
இனிமேல் உன்னை நினைத்து!
கண்ணீர் விடப்போவதில்லை நான்!
என்னுள் இருக்கும் நீ!
என் கண்ணீர் வழி!
கரைந்து விடுவாய் என்பதால்...!
---!
உன்னை !
செல்லங்கொஞ்சி அழைப்பதால் !
நீ என் !
செல்லமாகி விடவில்லை.!
நீ செல்லுமிடமெங்கும்!
என் நினைவுகள் சுழல்வதால் தான் !
நீ என் !
செல்லமாகி விட்டாய்!
----!
உன்னைத் தேடி வேறெங்கும் !
அலையப் போவதில்லை !
நான்.!
கண்கள் மூடி !
எதைப் பற்றி யோசித்தாலும் !
முண்டியடித்துக் கொண்டு !
முதலாவதாய் வந்து நிற்கிறாய் !
நீ
முனைவென்றி நா சுரேஷ்குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.