இயல்பினை இழக்கையில் - இளங்கோ

Photo by FLY:D on Unsplash

தொலைதூரத்துப் பயணங்கள் !
எப்போதும் !
மனதிற்கு !
கிளர்ச்சியைத் தருபவை !
நேரே காணவிருக்கும் !
மனிதர்களின் !
அன்பின் நினைவுகளுக்கு !
பெருந்தெருக்களைத் தாண்டி !
விரியும் !
நதிகளும் பெருங்காடுகளும் !
சுவை சேர்க்கும் !
'இரட்சிக்கும்' அமெரிக்காவும் !
இந்தியச் சினிமாவும் !
இல்லாமல் எந்தப் பயணமும் !
நிறைவேறியதாய் !
நினைவினில்லை !
அயல்வீட்டுக்காரி !
வேற்றினக்காரனோடு ஓடிய விந்தை !
பையன்களோடு !
பிருஷ்டம் உரசியபடி !
திரியும் தமிழ்ப்பெண்களின் திமிர் !
இப்படி... !
இந்தமுறை !
கூட பயணித்தவரின் !
கதைகள் முடிவற்ற கிளைகளாக விரிய !
நான் திணறினேன் !
முடியும் திசையின் தொலைவு தெரியாது !
வயதானவர் என்றபோதும் !
விருந்தாளியாக வந்தவர் !
பக்கத்து வீட்டுக்காரரின் !
கதை அளந்தபோது !
இப்படிப் பேசுவதென்றால் !
இங்கே வரவேண்டாமென !
முகத்திற்கு நேரே !
முன்னெப்போதோ சொன்னது !
நினைவினில் எழுந்தது !
எனினும் !
எதற்கும் உடனே !
எதிர்வினை செய்யும் !
பொறுமையற்றவன் !
எனும் !
அப்பாவின் முணுமுணுப்புக்களை !
இந்தமுறையாவது !
பொய்யாக்கும் முனைப்புடன் !
நான் !
செவிகளாக மட்டுமே ஆயினேன் !
என் மௌனம் !
பயணித்தவருக்கு !
உற்சாகம் தந்திருக்கக்கூடும் !
தான் கொடுத்த !
பெரும் கடனையும் !
மீளப்பெற முடியாத !
இயலாமையையும் !
இனி ஒரு வாழ்வு !
இயல்பாய் அமைதல் கடினமெனவும் !
துயரத்தை விரித்தார் !
பெரும் நாவலைப்போல !
'கடன் வாங்கியவன் !
மூன்றாவதும் பெத்துப்போட்டு !
இலங்கைக்கும் !
சுற்றப்போய்விட்டான் !
நான் !
காசில்லாது உழலும் பிச்சைகாரன் !
ஒரு டொலர் கோப்பிகுடிக்கக்கூட !
எத்தனை முறை யோசிக்கவேண்டும் !
எங்கிருந்தாலும் !
அவன் உருப்பப்படமாட்டான்' !
கவலை சாபமாய் விகசித்தது !
இளைப்பாற நின்ற !
ஓர் கோப்பிக்கடையில் !
நாமெல்லாம பலவீனர்கள்தான் !
எப்போதாவது சறுக்கிவிழுபவர்கள்தான் !
என்று சமாளித்தபடி !
ஏதோவெல்லாம் சொல்லி !
பயணியின் சோகம் கரைக்க முயன்றேன் !
செல்லவேண்டிய நிகழ்விற்கு !
ஒரு மணித்தியாலயம் தாமதாய் !
வந்ததைக்கூட !
அசட்டை செய்யாது !
விடைபெறும்போது, !
'தம்பி !
படிப்பு முடிந்து !
இந்த நகரிற்கு !
இடம்பெயர்வதாய் இருந்தால் சொல்லும் !
என்ரை மூன்றாவது வீடு !
இங்கை சும்மாதான் கிடக்கு !
வாடகைக்கு வந்து குடியமரலாம்' !
என்னைப் பார்த்துச் சிரித்தது !
எனது சுயம். !
!
இளங்கோ !
2003.06.09
இளங்கோ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.