தீத்துண்டுக் கனவுகள்! - கவிதா. நோர்வே

Photo by Freja Saurbrey on Unsplash

முற்பற்றை!
கறுத்த வானம்!
முகம் தெரியவில்லை!
அவர்கள் மூர்க்கமானவர்கள்!
இனம் புரியவில்லை!
இயலாமைக்குள் என் இருக்கை!
புதர்களின் இடையில்!
என் கூச்சல்!
அடிவயிற்றிலேயே அடங்கிவிட!
மூண்டெழுந்த தீத்துண்டு !
மார்பில்!
தணியாது எரிகிறது!
ஆயிரம்தலை நாகம் போல!
என் உருக்கவ்வி !
செரிக்கின்றனர்!
தீ சுட்ட ரணங்களாய்!
வடுக்களும்!
உடலெங்கும் கிறுக்கல்களும்!
!
நரகங்களுக்கப்பால்!
பயணப்பட்டு நான்!
மீளுகையில்...!
இறந்தடங்கிய நிகழ்வெல்லாம்!
தற்கால கனவுகளாய்!
கனத்துக் தொங்கும் ராத்திரிகள்!
இன்னும் விடியவில்லை!
இன்றும் அதே கனவு.!
தன் உடல் எரித்த!
மெழுகுகொன்று தன்னை!
நிறுத்திக் கொண்டது!
தெரிகிறது!
வெற்றுத்தாள் போல்!
என்னைச் சுற்றி!
எந்த வார்த்தைகளுமற்ற!
வெறுமையில்...!
என் சனத்தின் பாவை என்னை !
விழுங்குதல் போல்!
விரியும் கனவு!
எப்போ கண்கள் மூடுமென!
உற்றுப்பார்த்த வண்ணம்!
தலைமாட்டில் அமர்ந்துகொண்டிருக்கும்!
வெட்கங்கெட்ட!
அதே கனவு!
நான் சுருண்டு கொள்கிறேன்!
எத்தனை இரவுகள்!
கனவுப்பயம் சுமந்த இமைகள்!
வாய் பிளந்து விறைக்கும்!
சொல்!!
இரவுகள் புதிதல்ல!
கனவுகள் புதிது!
இரவினை ஒத்து !
எந்தன் சுற்றம் கொடிது!
காயங்கள் விழுங்கி!
கண்களை மூட!
கனவுகள் செறிக்கும்!
இரவுகள் கடக்க...!
வழி ஆயிரம் இருக்கிறது!
இரவுகள் கடந்தால்... !
வாழ்வில்!
இன்னும் ஏதோ இருக்கிறது!!
!
கவிதா. நோர்வே

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.