ஒரு பருவத்தின் நிழலில் கண்டேன்!
காணாமற்போனவனின் புன்னகையை!
கடந்துபோகமுடியாதபடி!
கொதித்துக்கொண்டிருந்தது தீத்துண்டாக!
அந்தப்புன்னகை!
அதில் காயாமலே இருந்தன!
இரண்டு கண்ணீர்த்துளிகளும்!
அவனுடைய குருதியும்!
திரும்பிச்செல்லவும் முடியவில்லை!
காணாமற்போனவனின் புன்னகையை விட்டு!
அங்கிருக்கவும் முடியாது!
காயமறுக்கும்!
கண்ணீர்த்துளிகளின் முன்னாலும் !
குருதியின் அருகாமையிலும்
கருணாகரன்