மண் - கனிகை

Photo by Philippa Rose-Tite on Unsplash

மண்ணே!!
உன்னோடு நானும்!
என்னோடு நீயும்!
மௌன யுத்தம் செய்தோம்.!
வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும்!
இடையில் இருந்தோம்.!
அந்த அமைதியையே!
எங்களைப் புரிதலுக்கான!
மொழிகளாக்கினோம்.!
!
தெளிவான சிந்தை வழி!
கரை தேடிப் போனோம்.!
அது!
எமக்கான!
பற்றுதல்களை!
ஆத்மார்த்தம் மீதான இழைகளை!
அறுக்காது!
என்பதும்!
உணர்த்தப்பட்டது;!
உணரப்பட்டது.!
ஆண்டுகள் தம் இயல்புடனே!
போகின;!
கடமைகள்!
பலவாகின.!
உனக்கான நேசமும்!
அந்நேசத்திற்கான!
இருத்தலும்!
எப்போதும் என்மனத்தோடும்!
தொடர்ந்தே வந்தன.!
இன்று!
நீ!
குதறப்பட்டாய்;!
இரத்தம் சிந்தினாய்;!
வீழ்ந்து கிடக்கின்றாய்.!
செய்திகள் பறக்கின்றன;!
மௌனிக்க முடியவில்லை;!
கையாலாகாத்தனத்தில்!
மனம் இறுகி போகின்றேன்.!
மீளவும் உணர்கின்றேன்;!
உனக்கான மதிப்பும் விருப்பும்!
உயிர்ப்புடனே இன்னும்!
என்னுடனே.!
கணந்தோறும் கரங்கள்!
நீள்கின்றன;!
அவை!
ஆறுதலுக்கானவை;!
பற்றி எழுப்பலுக்கானவை;!
மலர்ச்சிக்கானவை.!
தேடி மனவெளி பயணப்பட்டேன்;!
கொடூரங்களற்ற நிறைவான!
அமைதிப் பொழுதொன்றில்!
உன்!
புன்சிரிப்பின் அர்த்தங்கள் மட்டும்!
என்னோடு பேசினால் போதும்.!
!
-கனிகை
கனிகை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.