மனம்.. மாற்றம் - கலாநிதி தனபாலன்

Photo by FLY:D on Unsplash

01.!
மனம் !
---------!
அவன் அவள் !
இவர்கள் அவர்கள் !
இவர்கள் எல்லாம் வீட்டுக்குள் !
இரண்டு கால் மிருகங்கள் !
நீயும் நானும் !
நிலையாய் இணைவதை !
நிறுத்தத்துடிக்கும் !
(அ)நியாய வாதிகள் !
நீயும் நல்ல நீ !
நானும் நல்ல நான் !
நல்லவனாதலால் !
நகர முடியவில்லை !
நிலையாய் நிற்க முடியவில்லை !
நீண்ட தூரம் !
விடைபெறத் துடிக்குது மனசு! !
02.!
மாற்றம் !
------------!
என்றேனும் மரணித்துப் போகக்கூடிய !
மாந்தர்களின் !
மனம் என்ற குரங்கு !
எண்ணற்ற பல மந்திரக்கனவுகளால் !
கணத்துக்கு கணம் !
கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது. !
கண்டதையும் கேட்டதையும் !
கௌரவமாய் நினைத்து !
கடிவாளம் போடாத குதிரையைப் போல் !
காரணமே தெரியாமல் ஓடி- கடைசியிலே !
காலனின் கைகளிலே கட்டுண்டு போகிறது. !
எனினும் !
இடைப்பட்ட இந்த ஓட்டத்தில் தான் !
எத்தனை மாற்றங்கள்… !
மாற்றம் ஓன்றே மாறாததாயினும் !
மரணம் ஒன்றே மாற்ற இயலுமோ? !
-கலாநிதி தனபாலன்
கலாநிதி தனபாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.