தோல்வி.. மனைவி.. காதல் கணக்கு - இரா சனத், கம்பளை

Photo by Tengyart on Unsplash

01.!
தோல்வி!
-----------!
மாணவனுக்கு பரீட்சையில் தோல்வி!
மன்னனுக்கு ஆட்சியில் தோல்வி!
மங்கையருக்கு காதலில் தோல்வி!
மடையனுக்கு மகிழ்ச்சியும் தோல்வி!
அலட்சியத்தால் இலட்சியத்துக்கு தோல்வி !
அமைதியால் ஆணவத்துக்கு தோல்வி !
அடிமைத்தனத்தால் வீரத்திற்கு தோல்வி !
அறியாமையினால் அறிவுக்கு தோல்வி!
காலை பொழுதினிலே கங்கை கரையினிலே!
கன்னியர்கள் கவர்ச்சியாக நீராடுவதை கண்ட!
கதிரவனுக்கு முகில் கூட்டத்தால் தோல்வி!
முன்நோக்கி செல்வதற்கு முனையாமல்!
பின் நோக்கி நகர்வதற்கு முனையும்!
வீரத்தன்மையற்ற படைவீரர்களுக்கு !
போர்களத்தில் தோல்வி நிச்சயம் !
மக்கள் தேவையை நன்கு அறிந்து!
மக்களுக்கு சேவையாற்ற தவறும்!
அதிகாரமுடைய அமைச்சர்களுக்கு!
தேர்தலில் படு தோல்வி நிச்சயம்!
அன்னையை மதிக்காமல்!
ஆண்டவனை துதிக்காமல்!
அலட்சியமாய் வாழ்பவனுக்கு!
தொட்டதெல்லாம் தோல்வியாகும்!
02.!
மனைவி!
------------!
அன்னைக்கு இணையாக!
அறிவுக்கு ஒளியாக!
அன்பு செலுத்த வரும்!
அழகு தேவதை அவள்!
உறவுகளை விடுத்து!
உடமைகளை வெறுத்து!
உனக்காகவே வாழும்!
உண்மை ஜீவன் அவள்!
உன் தேவைக்காக!
உறக்கத்தையே இழந்து!
உன் தாகத்தை தீர்க்கும்!
உன்னதமான உறவு அவள்!
தோல்வியில் ஏணியாய்!
தத்தளிப்பில் தோணியாய்!
நின்று தோல்கொடுக்கும்!
வாழ்க்கைத் தோழி அவள்!
தனிமையில் வாழ்ந்த நீ!
தாரகையின் வருகையால்!
தன்னிறைவு அடைந்தாய்....!
03.!
காதல் கணக்கு!
--------------------!
அங்கும் இங்கும் கடன் பட்டு!
அன்பு எனும் மூலதனமிட்டு!
ஆரம்பித்தேன் அவள் மனதில்!
ஓர் புதிய காதல் கணக்கு!
நித்தம் நித்தம் சேமித்தேன்!
நிலையான வைப்பு செய்ய!
நிலைமாறி போனது வங்கி!
நிம்மதியற்று போனது வாழ்க்கை!
முதலீடு செய்ய செய்ய இஷ்டம்!
அதை மீளப்பெறுகையில் கஷ்டம்!
காதல் கணக்கே ஓர் நஷ்டம்!
வேணடாம் இனி இக் காதல் திட்டம்
இரா சனத், கம்பளை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.