பெண் மனம் - சு.திரிவேணி, கொடுமுடி

Photo by Daniel Seßler on Unsplash

சக்தியின் மறுவடிவமாய் !
கலைகளின் உறைவிடமாய் !
எழுத்திலும் ஏட்டிலும் !
அழகாய் தான் இருக்கிறாள் !
நாற்பதாயிரம் மனைவியருள் !
ஒருத்தியாய் !
நாற்புறமும் வேட்டை நாய்கள் !
சூழப் பரிதவிக்கும் !
ஒற்றை மானாய் !
நீரில்லா மீனாய் !
செல்லரித்துப் போன சமூகத்தால் !
சிதைக்கப் படுகிறாள்! !
கல்வி கலவி கடமை என !
எந்தச் சூழலிலும் !
பிறர் வடிக்கும் !
ஓவியத்த்திற்கு நிறமாய் !
மட்டுமே பொருந்துகிறாள்! !
நிறத் தேர்வும் இவளதல்ல! !
தனக்கேற்ற தேவையை !
பெண்ணுக்கான வாழ்வாய் !
மொழிகிறது சமூகம் !
வந்ததன் நோக்கம் அறியாமலே !
வாழ்ந்து முடிக்கிறாள் பெண் !
கறையான் அரித்த கோட்டையாய் !
காற்றில் கரைந்து போகிறாள்! !
செயப்படு பொருளாயிருத்தல் இயல்பு !
செய்பொருளானால் இழிவாய்க் கொள்ளும் !
மனித வர்க்கம்! !
பெண்மைச் சிதைவுக்கும் !
பெண் மனச் சிதைவுக்கும் !
பெரிதும் இல்லை வித்தியாசம்! !
இந்த உலகிற்கு !
பெண்மை தேவைப்படுகிறது !
பெண் மனம் தான் !
தேவைப்படுவதில்லை
சு.திரிவேணி, கொடுமுடி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.