மதியுரை - அகரம் அமுதா

Photo by Sonika Agarwal on Unsplash

கவிஆக்கம்: அகரம் அமுதா!
தேய்ந்து தேய்ந்து!
தொலைந்த நிலாவும்!
தோன்றி வளருது கண்டாயா ? அது!
தேய்ந்து தொலைந்தும்!
தோன்றி வளர்த்தும்!
தருமதி யுரைதனை கொண்டாயா?!
வளரும் போதும்!
மதியிழந் தேசிறு!
வழியும் மாறிச் செல்வதில்லை அது!
தளரும் போதும்!
தன்னை மறந்து!
தடத்தை மாற்றிக்கொள்வதில்லை!!
கொடுக்கக் கொடுக்கக்!
குன்றும் குறையும்!
கோள நிலாவும் குறைகிறது தனை!
எடுத்துக் கொடுத்த!
இளைய நிலாவின்!
இசையே பிறையாய் நிறைகிறது!!
முயன்றால் நிச்சயம்!
ஏற்ற மென்பதே!
பிறைவளர்ந் துணர்ந்தும் மதியுரைகாண. - நாம்!
முயலா விட்டால்!
வீழ்ச்சி யென்பதை!
முழுமதி தேய்ந்து உரைப்பதுகாண்!
இல்லை என்னும்!
இருளை ஓட்ட!
இளைய நிலாபோல் ஈந்துவிடு நீ!
கொள்ளை காணா!
திருக்க வேண்டின்!
ஈயும் போது ஆய்ந்துகொடு!
!
கவிஆக்கம்: அகரம் அமுதா!
தெகடர்புக்கு: 92468200
அகரம் அமுதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.