தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வேண்டும்....?

கவிவள்ளி
தேடவேண்டும்!
தெலைந்த மொழியை...!
அதிகார வர்கத்தினால்!
ஆளுமை கொண்டுருப்பது!!
இன்றைய மொழி !
மணவயதை கடந்தால்!
முதிர்கன்னியாம்...!
இணையாக?!
தேடவேண்டும்!
தெலைந்த மொழியை!
மணமுடிந்த மறு!
மாதமே இல்லையெனில்!
மலடியாம்...!
இணையாக? !
தேடவேண்டும்!
தொலைந்த மொழியை!
கட்டியவனை காலன்!
கொண்டால்!
கைம்பெண், விதவை... !
இணையாக? !
தேடவேண்டும்!
தெலைந்த மொழியை!
தனிவுடமையானவள்!
விதிவசத்தால்!
பொதுவுடமையானால்!
வேசி, விபச்சாரி...!
இணையாக? !
தேடவேண்டும்!
தெலைந்த மொழியை!
எகிப்தின் மம்மிகள் போல்!
தோண்டப்பட வேண்டும்!
இல்லையேல்.... !
உருவாக்கப்பட வேண்டும்!
பவித்திரமான புதுமொழியை! !
-- கவி.வள்ளி!
புதுச்சேரி

3 கவிதைகள்

நிர்வாணி
1. !
காதல் விசமென்று சொன்னார்கள் !
நான் அவர்களைப் பைத்தியக்காரர்களென்றேன் !
காதல் அமிர்தமென்றார்கள் !
ருசித்துப்பாத்தேன் !
தயவுசெய்து என்னிடம் !
காதலென்றால் என்னவென்று !
கேட்காதீர்கள் !
ஏனெனில் உணர்வுகளேயில்லாத !
உடலுக்குள் நான் !
!
2. !
இதயத்தில் இருந்து வெளியேறிய !
மின்னலையொன்று !
எவளோ ஒருத்தியின் இதயத்தில் !
எப்படியோ ஊடுருவி !
பதிலாக வந்த அந்த மின்னலைதான் !
காதல் !
3. !
காதல் !
எப்படி எங்கே யாருடன் !
எதுவுமே தெரியாமல் !
எதையும் தெரியாத உள்ளங்களும் !
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத !
ஏதோ ஒரு இன்பத்தை !
நோக்கிச்செல்லும்

உனது நினைவுகள் துயிலெழுப்பும்

நிந்தவூர் ஷிப்லி
அதிகாலை !
-------------------------------------------------!
!
மனசு இயல்பற்றிருக்கும் இந்த!
அதிகாலைப்பனிப்பொழுதில்!
சடுதியாய் கண் விழித்து!
எதைப்பற்றி எழுதுவது...??!
திரும்பத்திரும்ப என் மனம் நனைக்கும்!
உனதான பிரிவின் மீள முடியாப்பெருந்துயரம்!
ஒரு பாம்பைப்போல என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது..!
பிரக்ஞையற்றுப்போன உனது இருத்தலின்!
தொலைந்து போன புள்ளியில்!
எனது உயிர் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது...!
காலத்தின் மீது எனது வெறுப்பை!
துரிதமாக எறிந்து கொண்டிருக்கிறேன்..!
அதுதானே உன்னை எங்கேயோ!
என்னை எங்கேயோ..!
நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது...?!
விடையேதுமற்ற பல்லாயிரம்!
வினாக்களை சுமந்தலையும்!
ஒரு ஒற்றைப்பறவையின் ஏகாந்த ஏக்கங்களென!
எனக்குள் மட்டும் அதிர்ந்தடங்கும்!
உன் பிரிவின் ஆற்றாமையை!
இன்னும் எப்படியெல்லாம் நானுரைப்பேன்..??!
உன் பற்றியெழும் சுகமான நினைவுகள்!
காட்டுத்தீயென கண்டபடி என்னை!
சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி கருக்கி....!
அடிக்கடி என்னைத்துயிலெழுப்பும்!
உன் நினைவுகள் நனைக்கும் இந்த அதிகாலைப்பொழுதில்!
வெளியே பொழிந்து கொண்டிருக்கும்!
தூறல் மழையை கொஞ்சமேனும் ரசிக்க விடாமல்!
உலுக்கி எடுக்கிறது உனதான அத்தனையும்...!
சிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்!
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்!
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்....!
-நிந்தவூர் ஷிப்லி

சில்லரையாய்... வருவாயோ

செண்பக ஜெகதீசன்
01.!
சில்லரையாய்...!
-------------------!
ஆழக்கடல்!
அமைதியாய் இருக்கையில்!
இந்த!
ஓரக்கடல் ஏன்!
ஓலமிடுகிறது...!!
மணக்கும் மலர்கள்!
இணக்கமாய்!
மௌனம் சாதிக்கும்போது!
இந்த!
சருகுகள் ஏன்!
சலசலக்கின்றன...!!
பிணமும் கேட்கும்!
பணத்தில் கூட,!
கட்டுக் கட்டாய்!
கரன்ஸி நோட்டுக்கள்!
கப்சிப்பாய் இருக்கையில்,!
இந்தச்!
சில்லரைகள் எப்போதும்!
சிணுங்கத்தானே செய்கின்றன...!!
02.!
வருவாயோ...!
-----------------!
உண்டியலில்!
ஒருரூபாய் போட்டு!
வண்டி வண்டியாய்!
வரம் கேட்கும்!
பண்டமாற்று பக்தனே,!
வண்டி வண்டியாய்!
வந்துவிட்டால்!
வருவாயோ நீ!
வறுமையான சாமி பக்கம்

பனித்துளிகள்

அகரம் அமுதா
பனித்துளிகளே! முகில்தெளிக்கும்!
பன்னீர்த் துளிகளே!!
அரும்புகளின் மேனிபூத்த!
அம்மைக் கட்டிகளே!!
!
நீங்கள்!
பூப்பெய்தியப் பூக்களுக்கு!
பூப்பெய்யும் பூக்கள்...!
!
இரவு சிப்பியின்!
திரவ முத்துகள்...!
!
புல்வெளிக்கு வழங்கப்படும்!
போலியோ சொட்டுமருந்து...!
!
மேக விவசாயி கண்ட!
சொட்டுநீர்ப் பாசனம்...!
!
பாமரன் வீட்டுப்!
பாத்திரம் நிறைக்காத!
பருவ மழை...!
மண்மகள் மார்பினில்!
மலைப்பால் வற்றியதால்!
வான்முகில் புட்டிப்பால்!
வழங்கவரும் ஏற்பாடு...!
விண்வெளிச் சாலையில்!
விலக்குகள் எரிந்தும்!
மேக விமானங்கள்!
மோதிக் கொள்வதினால்!
உடைந்து விழுகின்ற!
உதிரித் துண்டுகள்...!
இரவு நீக்ரோவின்!
வெள்ளைவண்ண வாரிசுகளே!!
உங்கள் அழகினிலே!
உள்ளம் பறிகொடுத்து!
மங்கல மலர்களெல்லாம்!
மார்பள்ளிச் சூடிடுதோ?!
புற்களின் மார்பினில்!
இல்லாத கொங்கைக்கு!
கச்சித மானதொரு!
கச்சைஏன் ஆகின்றீர்?!
விண்மீன்களுக்கு நிகரான!
ஊர்வலம் நடத்திட!
மண்ணில் மலர்களுக்காய்!
முழங்கவரும் தொண்டர்களே!!
நீங்கள்...!
பெற்ற வெற்றிக்குப்!
பின்காணத் தோன்றாத!
அரசியல் வாதிகள்போல்!
அதிகாலை மறைவதேனோ?!
அகரம்.அமுதா

எல்லாக கண்களையும் இழந்த

தீபச்செல்வன்
சகோதரியின் கனவு!
-------------------------------------------------------!
யுத்தத்தை முடித்துத்திரும்பும்படி வழியனுப்பிய!
தன் இரண்டாவது கணவனையும்!
இழந்த சகோதரி!
இன்னும் உயிருடன் இருப்பதாக சொல்லியனுப்பியிருக்கிறாள்!
பதிலற்று கரைந்து கொண்டிருக்கின்றன!
என் வார்த்தைகள்!
நொந்துபோன குரல்களால்!
தன் காட்சிகளை அவள் கோரிக்கொண்டிருக்கிறாள்.!
எப்பொழுதும் அவளுக்கு!
முன்னாள் விளையாடித் திரிந்துகொண்டிருந்த!
தன் குழந்தைகளை தேடுகிறாள்.!
அழிக்கப்பட்ட காட்சிகள்!
ஆன்மைவை நிறைத்துக்கொண்டிருக்கின்றன!
எல்லாக் கண்களையும் இழந்துபோயிருக்கிறேன்!
என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறாள்!
கண்களை பிடுங்கிச் சென்ற ஷெல்!
அவளது இரண்டு பெண் குழந்தைகளையும் விழுத்திச் சென்றது.!
கண்களற்று துடித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான்!
அவள் மாபெரும் சனங்கள்!
கண்களை இழந்த!
மைதானத்தலிருந்து அகற்றப்பட்டாள்!
கண்கள் தொலைந்து போனது!
குழந்தைகளையும் கண்களையும் அவள் தேடிக்கொண்டிருந்தாள்!
சிதறிய குழந்தைகளின் குருதி!
காயமடைந்த அவளின் கண்கள் இருந்த இடத்தையும் நனைத்தன.!
குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி!
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருந்தாள்!
என்றும் தன்னால் தன் நிலத்தை!
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்.!
கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து!
கனவிழந்து தன் உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறாள்!
உடலெங்கும் ஷெல் துண்டுகள் ஓடியலைகின்றன!
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகின்றாள்

பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்

சின்னு (சிவப்பிரகாசம்)
01.!
பூக்கட்டும் புதிய புன்னகை!
-------------------------------------!
பூக்கட்டும் புதிய புன்னகை!
பூ விலங்குகள் அழியட்டும்!
ஒழியட்டும் ஒப்பாத கடமைகள்!
உணரட்டும் புதிய உலகினை!
கதவுகள் இங்கெதற்கு!
கயவர்கள் அழிந்தபின்னர்!
கடமைகள் இங்கெதற்கு!
உணர்வுகள் உணர்ந்த பின்னர்!
இருட்டினில் கோப்பெதர்க்கு!
இந்தியர் விழித்துவிட!
பகட்டினில் வாழ்வெதற்கு!
பட்டினிச் சாவிருக்க!
பகற்பொழுது தேவையில்லை!
பகலவன் உலா வர!
வழித் துணை தேவையில்லை!
மகேசன் பவனி வர!
பூக்கட்டும் புதிய புன்னகை!
பூவுலகு மீட்சி பெற!
உதிக்கட்டும் புதிய விதிமுறை!
அரசியலும் தூய்மை பெற!
இருட்டினில் சட்ட இயற்றலோ!
வெளிச்சம் கொண்டாருங்கள்!
குறைகள் நிறைய இருக்கலாம்!
வெளிச்சத்தில் செயல்படுங்கள்!
பூக்கட்டும் புதிய புன்னகை!
புவியாளும் மன்னர்கள் மத்தியில்!
தேர்தலுக்கு வாக்களித்தால்!
முடியுமா மண்ணாலும் மன்னர் கடன்!
மடியட்டும் பழைய விதிமுறை!
தேர்தலுக்கு மட்டும் மன்னர் வரும் முறை!
வெளிவிடுங்கள் ஆட்சி முறையினை!
மன்னரும் அறிந்து கொள்ளட்டும்!
பூக்கட்டும் புதிய புன்னகை!
புகைந்து வாழும் மனிதர் வாழ்விலும்!
பட்டினிச் சாவிருக்க!
பகட்டான வாழ்வெதற்கு!
பகலவன் வந்தபின்னும்!
இருட்டறையில் கோப்பெதர்க்கு !
02.!
ஏன் சினம்!
-----------------!
சினத்தினை அழிக்கவல்ல!
சிறு துளி நஞ்சிருந்தால் -என்!
சிந்தைக்கு அளித்திடுங்கள்!
அகத்தினில் மகிழ்ந்திடுவேன்!
ஏழ்மைக்கு வாழ்க்கைப்பட்ட!
ஏழைக்குப் பிறந்திட்டதால்!
கூழுக்குக் கவலைப்பட்டே!
இளமை கழிந்ததுவே!
சினமென்றும் கொண்டதில்லை!
வயிற்றுப் பசியிருக்க!
சிறுவயது கழிந்துவிட!
கை கொண்டே உழைத்து நானும்!
கனவுகள் வளர்த்துக்கொண்டேன்!
மணம் கொண்ட மங்கை நல்லாள்!
மகிழ்ந்திருக்க குழந்தைகள்!
என்வாழ்வும் வளம் கொள்ள!
சிறு பிழையும் சேர்ந்திடவே!
சிறுகுழந்தை வயதுவந்து!
வாழ்வும் தேடிடவே!
சினம் எனைச் சேர்ந்திடுதே!
அவன் வழி அவன் தேட!
என் மனம்!
ஏன் கொள்ளுது பெருஞ்சினம்

பக்தனைத் தேடி......?

நண்பன்
கடவுளைக் காண!
கிளம்பியது கூட்டம்!
கையில் கிடைத்த!
வாகனம் ஏற..!
நடுவழியில்!
சந்தேகம் வந்தது -!
கடவுள் எங்கிருக்கிறார்?!
பக்கத்தில்!
நின்ற வாகன ஓட்டியிடம்!
விசாரணை.....!
விரைந்து செல்லுங்கள் -!
நடை சாத்தும் நேரம்,!
அண்ணா சாலை வளைவில்!
தேவி தியேட்டர்களில்!
ஏதாவது ஒன்றில்....!
ஏதாவது சாலை ஒன்றில்!
பக்தர்கள் சென்ற!
வாகனம் துப்பிய!
அமில வாயுக்களால்,!
சுவாசிக்கத் திணறும்!
மலரொன்றை!
கவிதை ஒன்றால்!
வருடிக் கொண்டே!
தன் பக்தனை!
தேடிக் கொண்டிருக்கக் கூடும்........!
கடவுள் புன்னகையுடன்.......!
_________________!
நண்பன்

விஞ்ஞானம்

சென்னை - நவின், இர்வைன்
விஞ்ஞானம் தோற்கிறது!!
என்னவள்!
உள்ளிழுத்து!
வெளிவிடும் மூச்சுக்காற்றுக் !
கார்பன் டை ஆக்ஸைடாம் !
யார் சொன்னது? !
பிறகெப்படி நான்!
இத்தனை நாள் உயிரோடு!?!

திறவியல்

கார்த்தி.என்
01.!
ஒரே பூட்டை!
மூன்று சாவிகள்!
திறந்தன!
நான்!
ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்!
இரண்டைத்!
தொலைக்க!
முடிவெடுத்தேன்.!
!
02.!
அலுவலகப் பெற்றோர்..!
பள்ளி முடித்து!
வீடு திரும்பும்!
குழந்தைக்கு!
எதிர் வீட்டு அக்காவோ!
மளிகைக் கடை மாமாவோ!
தினம் சாவி கொடுக்கும்!
பொம்மைகள்..!
!
03.!
பாதி வழியில்!
திரும்பிச் சென்று!
இழுத்துப் பார்த்த!
அத்தனை முறையும்!
கையோடு வருவதாயில்லை!
வாயிற் பூட்டும்!
வாழ்ந்த நாட்களும்