தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உழவர் திருநாள்

சத்ய சுகன்யா சிவகுமார்
மண்ணில் பொன் செய்யும் ஏற்றமிகு கைகள்!
உணவுக்கொடை தினம் செய்யும் ஆற்றலுடைக் கைகள்!
இது பாட்டாளித் தொண்டனின் ஒப்பிலா உடைமைகள்!
இரந்து வாழ்தலைவிட இறந்து போகலாம் எனுமினத்தவன்!
நெற்றி வியர்வையை முதலாக்கி விளைச்சலைப் பிறர்க்களிப்பவன்!
இவன் அன்னபூரணன் தன்வாழ்வில் பூரணமே காண்பவன்!
கொடுப்பதைப் பெறுபவன் என்றும் பறிப்பதை அறியாதவன்!
உழவன் எனும் பெயர்க்கொண்டு பண்படுத்தி வாழ்பவன்!!
உழுவோரின் திறம் வியக்க சிரம் வணங்க!
தெய்வத்தைத் தெய்வமாகக் கரம்குவித்துக் கொண்டாடும் நாள்!
உழவர் புகழ் கூறும் உழவர் திருநாள்!
உழும் தெய்வத்திற்கு நான்கு நாள் உற்சவம்!
முதலில் மலர்வது போகி எனும் புனிதநாள்!
அல்லவற்றை போ!போ என விரட்டும் போகித்திருநாள்!
நல்லவற்றை வரவேற்க முனையும் உழவனின் உற்சாகப்பெருநாள்!
இந்நாள் முடிந்து வரும் நாள் தைத்திருநாள்!
தைதை எனத் தைமகள் ஆடி வந்து!
உழவு தெய்வத்தைத் தரிசிக்கும் பொன் நாள்!
உழவன் தன் நன்செய்நிலப்படைப்பால் தைமகளை வரவேற்கும் ஆனந்தத்திருநாள்!
இத்தெய்வம் பணி செய்ய வழிகாட்டும் தெய்வங்களைப்!
போற்றி பலசொல்லி புகழேத்தி நிற்கும் அற்புதப்பெருநாள்!
உலகெங்கும் தேர் செலுத்தி ஒளிகொடுக்கும் பரிதி!
அகழ்ந்த பொதும் செயல் பொறுக்கும் மண்மகள்!
அளவறிந்து பொய்க்காமல் பெய்யும் அமுத மாரி!
எனத்தெய்வங்களெல்லாம் ஒருசேர அருளும் தைதிங்கள் முதல்நாள்!
வைகறை நீராடி பொலிவுடன் புதியவற்றைசூடி உழவர்காள்!
தோழியர்சூழ மணவறை சேரும் குலமகள் போல!
கரும்புகள் சூழ இஞ்சிமஞ்சள் அணிகளோடு வாழையெனத் தழைக்க!
உழவர்தம் புதுப்பானை வாழைப்பந்தல் சேர்க்கும் மங்களநாள்!
சேர்ந்த புதுப்பனைதனை கோலமிட்ட பீடத்தில் விறகடுப்பிலேற்றி!
அக்கினித் தேவன் அருள் தனையும் சேர்த்து!
அமுதமாம் நீர்தனையும் வெல்லத்தையும் இட்டு பின்!
தன்கையால் விளைவித்த பொன் தனையும் சேர்த்து!
தம்வாழ்வென்றும் தித்திப்பாய் மகிழ்ச்சி பொங்க வேண்டி!
பொங்கலோப் பொங்கலென ஆர்ப்பரிக்க பொங்கலதைப் பொங்கி!
மண்மகளை மனம் குளிரச் செய்யும் பொங்கற்பெருநாள்!!
இனிது நிகந்ததென உழவர் கண் மலர!
விடிந்தது மறுநாள் மாட்டுப் பொங்கலாய் மலர!
உழவர்தம் மூன்றாம் கரம்தனக்கு புகழ்சேர்க்கும் திருநாள்!
விருந்து தருபவளுக்கே விருந்துபசரிக்கும் புனித நாள்!
காளைகளை அடக்கும் காளைகளுக்கு புகழ்சேர்க்கும் வீரம்நிறைநாள்!
அறத்தோடு மறம் போற்றும் உழவர்பெருமை சிறக்கும்நாள்!!
விளையாட்டின் வேகத்தோடு காலம் அது சேர!
விழிதிறந்தால் வந்து சேர்ந்தது காணும் பொங்கலாக!
சுற்றி வரும் உலகிற்கு எல்லாம் படைப்பவனுக்கு!
சுற்றத்தொடு சேர காணும் பொங்கலெனும் ஒருநாள்!
உழவர் காணும் இடமெலாம் வளம் பெருக!
கூடிக் கண்டு களிக்கும் இன்பத் திருநாள்!
தீயவையே போ நல்லவற்றையே காண் என!
போவில் தொடங்கி காணில் முடியும் அற்புதத்தத்துவம்!
உழவரைப் போற்றும் நான்கு நாள் உற்சவம்!
தமிழர் சிறப்பு கூறும் தமிழர் திருநாள்!
வாழ்வில் துறவோடு வளம்சேர்க்கும் உழவர் திருநாள்

மொட்டை மாடி புல்

s.உமா
எல்லையில்லா காட்டை யழித்தே இங்கு!
கட்டிடங்கள் கட்டு கின்றார் அதன்மேல்!
புல்லைவளர்த் தேபோற்று கின்றார் பாழ்பசிக்கது!
பழம்தருமோ நிழல்தந் திடுமோ நிற்க!
மணம்தருபூக் கள்மலர்ந் திடுமோ மண்ணைக்!
காத்திடுமோ ஏழை ஒருவன் தாகம்!
தீராதிருக்கை யிலேநீர் தருமோ நெஞ்சில்!
ஈரமில்லா தொருவன் தினம்பத் துவாளி!
நீர்பாய்ச்சி வளர்த்து விட்டப் புதுப்பணக்!
காரன்வீட் டுமொட்டை மாடி வளர்புல்

மனிதம் பிறப்பிப்போம். மெல்லக்

வித்யாசாகர்
மனிதம் பிறப்பிப்போம்!.. மெல்லக் காதலித்தோம்!
!
01.!
மனிதம் பிறப்பிப்போம்!!
------------------------------- !
உனக்கும் எனக்குமான நிகழ்வுகளில்!
பாசமும் போட்டியும் எப்படியோ !
நிகழ்ந்தே விடுகிறது;!
யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர்!
எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ?!
அந்த மெச்சுதலில் தான் !
தோன்றி போயின எத்தனை கோடுகள் -!
நாடென்றும் இனமென்றும் மதமென்றும்!
ஜாதியென்றும் - !
மொத்தமாய் மனிதத்தை கொன்றுவிட்டு!!
எங்கோ போகிறது நம் வாழ்க்கை!
கல்கி பிறப்பார் கடவுள் வருவார் !
அதிஷ்டம் அடிக்கும் என்றெல்லாம்!
சேர்த்து வைத்திருக்கும் -!
நாளைக்கான அத்தனை எதிர்பார்ப்பையும்!
தூக்கி எறி;!
வா, இன்றைக்காய் இந்த பொழுதிற்காய்!
எல்லாம் மறந்து மனிதராய் மட்டும்!
கட்டி அனைத்துக் கொள்வோம்!!
02.!
மெல்லக் காதலித்தோம்!
----------------------------- !
நீ தினமும் வரும்!
அதே தெருவில் தான்!
நானும் வருகிறேன்!
நீயும் வருகிறாய்;!
சற்று நேரம் முன்பாக!
வந்து பார்த்தேன்!
நீயும் முன்பாக வந்தாய்;!
சற்று தாமதமாக வந்தேன்!
நீயும் தாமதமாகவே வந்தாய்;!
நீ என்னை காதலிப்பதாகவோ!
நானுன்னை காதலிப்பதாகவோ!
இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை;!
நீ பார்க்கிறாய்!
நானும் பார்கிறேன்;!
நான் சிரித்தால்!
நீயும் சிரிப்பாய் -!
ஆனால் நாம் நம் சிரிப்பை!
நம் பின்னாளுக்கென!
மிச்சப் படுத்திக் கொண்டோம்;!
நம்மை நாமே வாரி நுகரும்!
வாசமாய் -!
நானும் நீயும் தினம் தினம்!
உன்னையும் என்னையும் நெருங்கிக் கொண்டிருக்க;!
மெல்ல அரும்புகிறது நமக்குள்!
காதலென - !
இருவருமே!
நினைத்துக் கொண்டே செல்கிறோம்..!
நாம் கடக்கும் தெரு முழுக்க!
நம்மை -!
விருச்சொடித் தனமாய் பார்கிறது

மூவுதடுகளின் இழை விளிம்பில்

அல் அமீனுல் தஸ்னீன்
மையத்தில் குவிந்திருந்தது !
கட்டுமான கவிதை சூத்திரம்!
பிறர்நிலை!
தன்னிலை!
மனநிலை!
சூழ்நிலை!
திடீரென மையமற்றதில் !
ஏறியதொரு பழஉண்ணி!
அடிமன இயல்பின் இயல்பாய்!
விளிம்பிற்கு நழுவும்!
மும்மனத்தில் முன்னங்கால்களற்ற!
அது தொக்கி நிற்கிறது!
இழை விளிம்பில் !
அபூர்வ தேநீர்!
மூவுதடுகளை !
ஒன்றாய் கொட்டி !
வேக்காடு சரியான பின்!
காத்திருக்கிறேன்!
மீண்டுமொரு !
காத்திர இரவிற்காய்!
எழுத்துக்கள் இப்போது!
மரநாயின் பின்னங்காலில் !
பயணிக்கிறது!

புதிய வருடத்தை வரவேற்கிறேன்

கோவை. மு. சரளாதேவி
நாளைக்கு என்பது நிச்சயம் இல்லை !
என்று அறிந்தபின்னும் !
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
இன்றைய வாழ்வை இனிதாய் வாழ !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
இருக்கும் நிமிடங்களில் இனியதை செய்ய !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
இன்பத்தை சுவைக்க!! !
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
உறவுகளின் உன்னதத்தை அறிய !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
இயற்கையே நமக்கு எதிராக திரும்பினால் !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
நன்மை செய்தவரை நாளும் நேசிக்க !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
உதவி செய்தவர்களின் உள்ளம் குளிர்விக்க !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
மனிதாபிமான மனித உள்ளங்களை இனம்காண !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
போர் இல்லாத உலகம் காண !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
புன்னகையை மட்டும் வீசும் உதடு காண !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
பிரிவினை இல்லாத சமூகம் காண !!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன் !
ஒற்றுமையான உலகம் காண !!!
வரவேற்கிறேன் உங்களுடன் நானும்

சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி
தினம் தினம்!
கழுகாய் பருந்தாய்!
வட்டமிடும்!
வஞ்சக வானூர்தி!
கருவறுக்க!
கோழிக்குஞ்சாய்!
எம் மக்கள்!
இடிமுழக்கம் எங்கு பார்த்தாலும்!
ஈழத்தமிழகத்தில் -குண்டுகளை!
அள்ளி எரிந்து ஆர்ப்பரிக்கும்!
அரக்கர் கூட்டம்!
கைக்கெட்டும் தூரத்தில்!
எம் உறவுகளின் தாய்த்தமிழ்நாடு!
கேட்காமல் கேட்கும்!
எம் உறவுகளின் ஓலங்கள்!
இவன் வாழும் நாடோ காந்தியின்!
அகிம்சை வழி!
நேருவின் சமாதனப்புறா-அதுவோ!
முதுகில் அடித்தவனை!
முழுவதும் தொழும்!
தாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ?!
கூட்டுப் பயிற்சியும்!
கொஞ்சிக்குலாவலும்!
நம் குல நாசம்!
செய்வதற்கேயன்றி வேறெதற்கு?!
ரகசியப் பேச்சுக்களும்!
ராடார் தளவாடங்களும்!
ஒளிவு மறைவற்ற!
ஒப்புதல் வாக்குமூலங்களும் -எம்!
நலிவடைந்த உறவுகளை!
நசுக்கத்தானே?!
சமாதானம் என்று சொல்லி!
சவ வண்டியனுப்பும்!
சறுக்கிய தேசத்தின்!
ஆற்றாமைத் தமிழன்!
அழுகிறான் இங்கே!
அவனுக்கு நாடிதுவே!
வேறில்லை அவனியிலே!
கண்ணீருக்கு தாழ்ப்பாள் போடும்!
கயவர்கள் கூட்டம்!
கட்சிக்கொடி ஏந்திக்!
கல்லாக்கட்டும்!
உள்ளொன்று வைத்து!
புறமொன்று பேசும்!
ஒப்பனைத் தமிழன்!
ஒளிரா நிலவு அமாவாசை!
உணர்வில்லா உறக்கம் பாவம்!
உடுக்கை மானம் உண்டோ அறியேன்...!
!
அத்திவெட்டி ஜோதிபாரதி

அம்மாவின் மடியாய்

உதயச்செல்வி
சாய்ந்து கொள்ளச் சுவரின்றி!
சரிந்து தாழ்ந்த மொட்டை மாடி!
மழைத் தாரை ஈரம் பட்டு!
மதிலோரம் படர்ந்த பாசி!
காய்ந்து நிற்கும் கொம்பைச் சுற்றி!
இழைந்து நிற்கும் கொடி!
நீர் சுமந்து களைத்தபடி!
மெல்ல நகரும் மேகம்!
சிறகசைத்து மிதந்து செல்லும்!
சாம்பல் நிற பறவைக் கூட்டம்!
குனிந்து தலையாட்டிக் கொண்டு!
கொட்டிலடையும் மந்தை!
புறங்கையில் கண் துடைத்து!
கலைந்த மயிரை சிலுப்பிக் கொண்டு!
களைத்துத் திரும்பும் பள்ளிச் சிறுவன்!
சுவரோரம் முதுகு உரசி!
சோம்பல் முறித்து நகரும் பூனை!
கட்டிக்கொண்ட முழங்காலில்!
பதித்துக் கொண்ட கன்னம்!
சோர்ந்த மனதுக்கு!
சுகமாகத்தான் இருக்கிறன....!
பதிவுகளும் படிமங்களும்.....!
--- உதயச்செல்வி

இலக்கணப் பாடம்: 1. காலம்

சேயோன் யாழ்வேந்தன்
நேற்று உண்டேன் !
இன்று உண்கிறேன் !
நாளை உண்பேன் !
நேற்று படித்தேன் !
இன்று படிக்கிறேன் !
நாளை படிப்பேன் !
நேற்று நடித்தேன் !
இன்று நடிக்கிறேன் !
நாளை நடிப்பேன் !
நேற்று இருந்தேன் !
இன்று இருக்கிறேன் !
நாளை இருந்தால் !
- தி.கோபாலகிருஸ்ணன், திருச்சி

இளமையோடு ஒரு பழைய காதல்

ஜாவிட் ரயிஸ்
இன்றோ நாளையோ!
இறக்கவிருக்கும் மரங்களில்!
இளமையோடு துளிர்க்கும்!
மலர் சிசுக்களாய்...!
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்!
விடை தெரியா கேள்விகளோடும்!
என் கிழட்டுக் காதல்,!
தள்ளாடித் தள்ளாடித்!
தேடுகின்றேன்!
தொலைந்து போன!
பழைய நினைவுகளை...!
அந்த மரத்தில் தானே!
செதுக்கினோம்!
உன் பெயரை நானும்...!
என் பெயரை நீயும்...?!
எம்மைப் போலவே- காலம்!
மரத்தையும் விட்டுவைத்தில்லை!
நரைத்த தலையுடன்!
நின்றிருக்கிறது.!
புதுப்புது காதல் தடங்களை!
தாங்கியிருக்கிறது!
படுத்துறங்கிய புல்வெளி!!
இந்த இடத்தில் தானே!
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?!
ஆமாம்!!
இதே இடம் தான்!!
இருமருங்கிலும் எழுந்து நின்று!
நிழல் பாய் விரித்து!
காதலர்களை வரவேற்கும்!
பெயர் தெரியா இம்மரங்கள்!
அவள் எங்கே?!
உன்னை தான் விசாரிக்கின்றன!
இந்த மரங்களுக்கு!
நினைவிருக்கும் நம் காதல்!
உனக்கு நினைவிருக்குமோ?!
நீ பற்றியிருந்த என் கரங்களில்!
தொற்றியிருக்கும்!
என் பேரனின் குரல்!
இழுத்தெடுக்கிறது என்னை!
மீண்டும் நிகழ்காலத்துக்கு!
தாத்தா நேரமாகிவிட்டது!
பாட்டி தேடுவாங்க!
என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்!
அந்த மரங்களின் கேள்விக்காவது!
விடை சொல்!
நீ எங்கே இருக்கிறாய்?

என் வீடு

புதியமாதவி, மும்பை
அப்படித்தான்!
அரசு முத்திரைத்தாள்களில்!
எழுதப்பட்டிருக்கிறது.!
இடப்பக்கமும்!
வலப்பக்கமும்!
பின்பக்கமும்!
இருக்கும் வீடுகளின் !
சுவர்களால்!
கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது!
என் அறைகளின் வடிவம்.!
மாடி வீட்டுக்காரனின்!
ஒவ்வொரு அறைகளையும்!
தாங்கி நிற்கும்!
என் வீட்டுக்குள்!
கிராமத்து வீட்டை!
விற்ற ஏக்கத்தில்!
செத்துப்போன!
அம்மாவின் நிழற்படம்.!
நுழைவாசலில்!
தொங்கிக்கொண்டிருக்கிறது!
அந்நியன் மொழியில்!
என் பெயரின் எழுத்துகள்.!
இவைதவிர!
இது என் வீடு!
என்பதற்கான!
எந்த அடையாளமும்!
என் வீட்டில் இல்லை.!
-புதியமாதவி, மும்பை